செய்முறை
முதலில் கேக்கை கீழே உள்ள லிங்கின்படி செய்து வைக்கவும்.
சாக்கலேட் கேக் செய்முறை (ரெசிபி ) முட்டை இல்லாமல்
பின்
கேக்கை நன்கு பொடியாக்கவும்.
நான் இங்கு சாக்கலேட்டையும் , ஃப்ரெஸ்க்ரீமையும் உருக்கி சேர்த்து , கேக்கை சப்பாத்தி மாவு போல் உருட்டினேன்.
உருட்டுவதற்க்கேற்ப ஐசிங்கை சேர்க்கவும்.
நீங்கள் விருப்பப்பட்டால் பட்டர் ஐசிங்க் (அ) சாக்கலேட் , சேர்த்து கேக்கை மாவு போல் திரட்டவும்.
பின்
உருண்டை ஒரே அளவு பிடிக்க, ஸ்பூனில் எடுத்து, உருட்டி, 3 முதல் 5 மணி நேரம் ஃப்ரிஜ்ஜில், வைக்கவும்.
லாலி பாப் குச்சிகளை தயாராக வைக்கவும்.
பின்
உருண்டைகள் கெட்டியானதும், குச்சிகளை அதில் ஏற்றி, உருக்கிய சாக்கலேட்டில் பிரட்டி எடுத்து, பட்டர் பேப்பர் மேல் வைத்து, ஃப்ரிஜ்ஜில் வைத்து செட் செய்யவும்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பர்.
No comments:
Post a Comment