100 கிராம் பனீர்
துண்டுகளை, ¼ டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது உப்பு, தயிர்( 1 டே.ஸ்பூன் ),
கரம்மசாலா தூள் (1/2 டீ.ஸ்பூன்) சேர்த்து பிரட்டி , ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் தனித்தனியாக:
வெங்காயம் – 2
தக்காளி -1
விழுதாக்கவும்.
பின் ஒரு தவாவில்
1 டீ.ஸ்பூன் ஆயில் விட்டு, பனீர் துண்டுகளை மட்டும் சேர்த்து, உடையாமல்
வறுக்கவும்.
ஒரு கடாயில்
எண்ணை மற்றும் வெண்ணை சேர்த்து, சூடானதும் சீரகம் தாளித்து, வெங்காய இஞ்சிபூண்டு விழுதை
சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி விழுதை சிறிது உப்பு , சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சதூள்,
மிளகாய் தூள் (1 டீ.ஸ்பூன்), தனியாதூள் (2 டீ.ஸ்பூன்), கரம்மசாலா தூள்( 1
டீ.ஸ்பூன்), பனீர் ஊறிய மீதமான தயிர் கலவை , சேர்த்து வதக்கி,
½ கப் பட்டானி ,
உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்.பட்டானி வெந்து, எண்ணை மேலே விட்டு வரும்.
கடைசியாக , வறுத்த
பனீர், கொத்தமல்லி தழை, 1 பின்ச் கசூரி மேதி( காய்ந்த வெந்தய இலை)
சேர்த்து, 1
நிமிடம் கழித்து. அடுப்பை அணைக்கவும்.
கசூரி மேத்தி |
பனீர் டிக்கா மசாலா |
No comments:
Post a Comment