எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Showing posts with label கெலகோஸ்--ப்ரசல் ஸ்ப்ரௌட்ஸ். Show all posts
Showing posts with label கெலகோஸ்--ப்ரசல் ஸ்ப்ரௌட்ஸ். Show all posts

கெலகோஸ் வேர்க்கடலை வறுவல் / Brussel sprouts peanut fry


செய்முறை

கெலகோஸை வெட்டி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்
சிறிது உப்பு சேர்த்து
மிதமான தனலில் நன்றாக வறுபடும் வரை வறுத்து, கடைசியாக 
வேர்க்கடலை பொடி (பொடி ரெசிபி பார்க்க இதை க்லிக் செய்யவும்)
தூவி,  மிதமான தனலில் பிரட்டி , அடுப்பை அணைக்கவும்.
சாம்பார் சாதம், சாத வகைகளுடன் சுவையாக இருக்கும்.



Brussel sprouts chutney (கெலகோஸ் ) சட்னி



செய்முறை

பொடியாக நறுக்கிய கெலகோஸ் - 1 கப்


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 2 ஸ்பூன் பச்சைபயிர், 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து மிதமான தனலில், நிறம் மாறும் வரை வறுத்து,
காயை சேர்த்து நன்கு வதக்கவும்




காய் வதங்கியதும், 1/4 கப் துருவிய தேங்காய், 2 பல் பூண்டு, சிறு உருண்டை புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறியதும் , உப்பு சேர்த்து , தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.


இதை சாதம்,இட்லி தோசை, சப்பாத்தி, ரொட்டியில் தடவி 
பறிமாறலாம்.



கெலகோஸ் வறுவல் / Brussel sprouts fry



செய்முறை

கெலகோஸை சுத்தம் செய்து நான்காக வெட்டிவைக்கவும்.
பின் 
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து
காயை சேர்த்து, உப்பு மஞ்சதூள், சாம்பார் தூள் சேர்த்து
பிரட்டி, 2 நிமிடம் மூடி வைக்கவும்.
காய் வெந்து விடும்,




பின் மூடியில்லாமல் , பிரட்டி , சிம்மில் 5 நிமிடம்  வைக்கவும்
நன்றாக வறுபட்டு, சுவையாக இருக்கும்.


இதனை சப்பாத்தி, சாம்பார் சாதம்,..... பறிமாறலாம்



கெலகோஸ் மல்லி குருமா / Brussel sprouts kurma



செய்முறை


கெலகோஸை கழுவி 4ஆக வெட்டவும்

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, 1 பெரிய வெங்காயம், 2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அடுப்பை அணைக்கவும், 
அந்த சூட்டிலேயே 
1/2 கப் கொத்தமல்லி தழை, மஞ்சதூள், 1 ஸ்பூன் மல்லி தூள், 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, முந்திரி, 1/4 கப் தேங்காய் துருவல், 1 ஸ்பூன் கரம்மசாலா அல்லது சிக்கன் மசாலா தூள் சேர்த்து, பிரட்டி, 
ஆறியவுடன் அரைத்து வைக்கவும்.



பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் தாளித்து
நறுக்கிய 1 வெங்காயம், 1 கப் கெலகோஸ் சேர்த்து வதக்கி, அதனுடன் வேகவைத்து உதிர்த்த 1/2 கப் ஸ்வீட் கார்னை சேர்த்து, உப்பு சேர்த்து மூடி காய் 3/4 பதம் வேகும் வரை விடவும்.


பின் 1/4 கப் தக்காளி சேர்த்து லேசாக  வதக்கி, அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு மற்றும் பாவ்பாஜி மசாலா 1/2 ஸ்பூன் தூவி
5 நிமிடம் மூடி வைத்து அடுப்பை அணைக்கவும்.



இதை சப்பாத்தி, புலாவ், ஆப்பம், இடியாப்பம், தோசையுடன் பறிமாறலாம்





Related Posts Plugin for WordPress, Blogger...