எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Showing posts with label Sundal. Show all posts
Showing posts with label Sundal. Show all posts

Mochai Fry / மொச்சை சுண்டல் / மசாலா




Ingredients

Fresh Mochai - 1 cup



Small Onion - 10
Big Onion -1
Tomato-1
Garlic - 4 pods
Green chillies - 2

Turmeric powder - 1/4 tsp
Sambar Powder - 1 tsp
Salt
Shredded coconut - 1/4 cup

Oil - 2 tbsps
Mustard seeds, curryleaves

Coriander leaves



செய்முறை

மொச்சை கொட்டையை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 
குக்கரில் 3 விசில் விடவும்.

மொச்சை வெந்தவுடன்,
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு , கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின் வெங்காயம், பூண்டு , பக்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி , மஞ்சள்தூள், சாம்பார் தூள், சிறிது உப்பு சேர்த்து,
தக்காளி கரையும் வரை வதக்கி,

பின் வேகவைத்த மொச்சையை சேர்த்து, 
தண்ணீர் வற்றும் வரை விட்டு, 

பின் தேங்காய், கொத்தமல்லி சேர்த்து , பிரட்டி, 
அடுப்பை அணைக்கவும்.



Pressure cook Mochai with water and salt till done.
(Leave 3 whistles)
Keep aside.

Heat Oil in kadaai, temper mustard seeds and curryleaves.

Now add chopped onions, garlic and greenchillies.
Saute lightly.
Add tomato , turmeric powder and sambar powder, 
saute until tomato becomes mushy.

Then add cooked Mochai and allow it to boil till water dries off.

Then add coconut and coriander leaves, Mix well.
Serve like snacks, with sambarrice, curd rice.....






Chenna Masala Sundal ( கொண்டைகடலை மசாலா சுண்டல் )



Ingredients

Kabuli Chenna - 200 gms

Oil - 2 tbsp
Salt


To grind:
Big Onion -1 
Ginger garlic pieces - 5 to 6
Turmeric powder
Chilly powder - 1/2 tsp

To Garnish / Serving :

Chopped onion, Grated carrot and coriander leaves.
Sev - option



செய்முறை



கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை மாற்றி , சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும்.
குக்கரில் 2 அ 3 விசில் விடவும்.
தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

மிக்சியில் வெங்காயம், இஞ்சி பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூளை
விழுதாக அரைக்கவும்.
  



கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதும் உப்பும் சேர்த்து
நன்றாக வதக்கவும்.
மசாலா பச்சை வாசம் இல்லாமல், நன்றாக சுருண்டு வரும் வரை விடவும்.


பின் வேகவைத்த கொண்டைகடலையை சேர்த்து, மிதமான
தனலில் நன்றாக பிரட்டி விடவும்.
பின் அடுப்பை சிம்மில் வைத்து, 10 நிமிடம் , மசாலா  கடலையுடன்
பிரண்டு வரும் வரை விட்டு
அடுப்பை அணைக்கவும்.


பறிமாறும் பொழுது, சுண்டலின் மேல்
பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட்
நறுக்கிய கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

சுவையான மசாலா சுண்டல் தயார்.
இதை ரொட்டியுடனும் பறிமாறலாம்.




Chenna Masala Sundal Recipe



Soak the Chenna with water for about 8 hrs .

Then change the water and 
cook it with some salt , leaving 2 to 3 whistles in cooker.
Remove the water and keep aside.

Make a paste with Onion, ginger garlic, turmeric and chilly powder.

Heat the oil , add the paste and some salt.
Saute well in medium flame till raw flavour goes and becomes thick.

Now add the Chenna , mix well in medium flame .
Keep in low flame and mix till the masala coats well in chenna.

Masala sundal is ready to serve.

Serving suggestion:

Sprinkle some chopped onions, corianderleaves and grated carrot.

Yummy Yummy.....


Can serve with Bread as sandwich.










Sweetcorn Sundal ( சோள சுண்டல் )



Ingredients

Corn Kernels ( cooked ) - 1 cup
Chopped onions - 1/4 cup
Greenchillies - 3 to 5
Scrapped coconut - 1 tbsp

salt

oil - 2 tsp
mustard seeds - 1/4 tsp
Urad dal, chana dal , curryleaves for seasoning

Coriander leaves


செய்முறை

மக்கா சோளத்தை , வேகவைத்து, உதிர்த்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு,
கறிவேப்பிலை தாளித்து,
அதனுடன் நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து
நன்றாக வதக்கவும்.




பின் சோளம்,  கொத்தமல்லிதழை, உப்பு  சேர்த்து, மிதமான சூட்டில் கலக்கி, கடையாக தேங்காய்ப்பூ சேர்த்து பிரட்டி,
அடுப்பை அணைக்கவும்.

சுவையான சத்தான , எளிதில் செய்யகூடிய சுண்டல் தயார்.

டீ யுடன் பறிமாறலாம்.


Sweetcorn Sundal Recipe


Heat a pan / kadaai, add oil in it.
Season Mustard seeds, then followed by uraddal and chanadal.
When the colour starts changing, add curryleaves,
then Onions and greenchillies.
Saute well.

When the onion's raw smell disappears, add the corn kernels, salt and corianderleaves.
Mix well in medium flame.

Finally add coconut, mix well and off the stove.

Serve hot with Tea.






கொண்டைகடலை சுண்டல் / Brown Chenna sundal


செய்முறை



1 கப் கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, அத்தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் ஊற்றி, வேகவைக்கவும்.

பின் ஒருகடாயில் ஒரு கரண்டி எண்ணை விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை  தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் ½ கப், 3 பச்சைமிளகாய், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த கடலை, உப்பு, 1/4 கப் தேங்காய் துருவியதை சேர்த்து மிதமான தனலில் வதக்கவும்.

பின் கொத்தமல்லி சேர்த்து, கலக்கி பறிமாறவும்.






பாசிபயிர் சுண்டல் / Greengram Sundal



செய்முறை




1 கப் பாசிபயிரை கழுவி, அளவான தண்ணீர் விட்டு , பயிரை மசியாமல் வேகவைக்கவும்.




பின் ஒருகடாயில் ஒரு கரண்டி எண்ணை விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை  தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் ½ கப், 3 பச்சைமிளகாய், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த பயிர்,உப்பு, 1/4 கப் தேங்காய் துருவியதை சேர்த்து மிதமான தனலில் வதக்கவும்.

பின் கொத்தமல்லி சேர்த்து, கலக்கி பறிமாறவும்.

குறிப்பு: இதே முறையில் வெள்ளை கொண்டைகடலை, கருப்பு கொண்டைகடலை, கொள்ளு, பட்டானி, ராஜ்மா,கடலைப்பருப்பு, மொச்சை, வேர்க்கடலை,காராமணி, இவற்றை தனித்தனியாகவோ (அ) அணைத்து தானியங்களையும் சேர்த்து நவதான்ய சுண்டலாகவும் செய்யலாம்.




Related Posts Plugin for WordPress, Blogger...