எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Showing posts with label Prawns Recipes. Show all posts
Showing posts with label Prawns Recipes. Show all posts

இறால் பீஸா ( மெக்சிகன் இறால் )



செய்முறை
முதலில் பேஸை தயாராக வைக்கவும் 
பீஸா பேஸ் செய்முறை  இந்த லிங்கில் பீசா பேஸ் செய்முறை

பின்
10 முதல் 15 பெரிய இறாலில்
1/4 ஸ்பூன் ( மிளகாய் தூள், சீரகமல்லி தூள், உப்பு
ஆரிகானோ )சம அளவில்
சேர்த்து பிரட்டி, ஊறவைக்கவும்

பின் ஒரு நாண்ஸ்டிக் தவாவில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு
இரு புறமும் இறாலை 2 நிமிடம் வறுத்து வைக்கவும்.


ஒவனை கன்வென்சன் மோடில்  180*செ ப்ரீ ஹீட் செய்யவும்.

பிறகு தயாராக இருக்கும் பீசா பேஸில் பீஸா சாஸ் அல்லது டொமேடோ சாஸ் தடவி, துருவிய மோசரலா சீஸ் தூவி
குடைமிளகாய், ஹாட் பெப்பர் , தக்காளி , இறால் தூவவும்
மீண்டும் துருவிய மோசரலா சீஸ் தூவி



ஒவனில் 6 முதல் 10 நிமிடம் , சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும்.
கட் செய்து சூடாக பறிமாறவும்



குழந்தைகள் சிலர் காய்கள் இல்லாமல் விரும்புவர் , அந்த சமயத்தில், சாஸ் தடவி, சீஸ் தூவி 
ஓவனில் வைத்து எடுத்து கொடுக்கவும்
மைதா மாவிற்கு பதில் கோதுமை மாவில் செய்து கொடுக்கவும்.











இறால் ஆப்பம்



செய்முறை

ஆப்ப மாவிற்கு இதை அழுத்தவும்  ஆப்பம்

இறால் செய்முறை:

சுத்தம் செய்த இறாலில் சிறிது இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சதூள், உப்பு சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய
வெங்காயம் - 1
தக்காளி - 1/2 
இறால் - 1/2 கப்
தயாராக வைத்து கொள்ளவும்.



பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி வதங்கியதும் , நறுக்கிய இறாலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் 1/4 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீ.ஸ்பூன் மல்லி தூள், 1 துளி சீரக தூள், மஞ்சதூள் ,உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை விட்டு, கொத்தமல்லி தூவி , ஆறவிடவும்.





பின் ஆறிய கலவையில் 2 முட்டை சேர்த்து கலக்கி வைக்கவும்.


பின் ஆப்ப கடாயில் மாவை ஊற்றி சுலற்றி, அதன் மேல் 1 கரண்டி இறால்முட்டை கலவையை ஊற்றி சுலற்றி, எண்ணெய் விட்டு, மூடி மிதமான தனலில் வேக வைக்கவும்.
சுவையான இறால் ஆப்பம் தயார். 

இதே முறையில் மட்டன் ஆப்பம் செய்ய:

 




பிபிகு இறால் (BBQ Prawns in my way)

செய்முறை

இறாலில் சிறிது உப்பு, மஞ்சதூள், மிளகாய் தூள், தயிர், சீரக மிளகு தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.


பின் புல்கா செய்யும் வலைத்தட்டின் மேல் இறாலை வைத்து, அடுப்பில் வேகவிடவும்.




இறால் பிரியாணி



செய்முறை

200 கிராம் பாஸ்மதி அரிசியை கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம்  ஊறவைத்து
1 விசில் விட்டு , சாதத்தை உதிரியாக வைக்கவும்.

250 கிராம் சுத்தம் செய்த இறாலை சிறிது இஞ்சிபூண்டு விழுது, உப்பு, மஞ்சதூள், மிளகாய் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, எண்ணெயில் பொறிதெடுத்து வைக்கவும்.

பின் 
ஒரு கடாயில் 1 கரண்டி எண்ணை ஊற்றி , பட்டை கிராம் ஏலக்காய், பி.இலை, தாளித்து, 1 டே.ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பின் 1 சிறிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சோம்பு தூள், 1/2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து வதக்கி, ஊறிய இறாலை சேர்த்து, 1 ஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, சாதம், கொத்தமல்லி தூவி பிரட்டி, 

                                      
                                      
பொறித்த வெங்காயம் , கொத்தமல்லி தூவி, 5 நிமிடம் சிம்மில் மூடி வைத்து , அடுப்பை அணைக்கவும்.




க்ரிஷ்பி ப்ரான்ஷ்


தேவையான பொருட்கள்
இறால் – ½ கிலோ
மசாலாவிற்கு:
இஞ்சிபூண்டு விழுது – 1 டீ.ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ½ டீ.ஸ்பூன்
உப்பு, மஞ்சதூள்
மிளகு தூள் – ½ டீ.ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ.ஸ்பூன்

ரொட்டி தூள் - பிரட்ட


செய்முறை





சுத்தம் செய்த இறாலுடன் மசாலாக்களை சேர்த்து பிரட்டி, ½ மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் ரொட்டி தூளில் பிரட்டி, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்




பூண்டு இறால் ( Garlic prawns)



செய்முறை



சுத்தம் செய்த 1/2 கிலோ இறாலுடன்,  1 முட்டை, உப்பு மிளகு தூள் சேர்த்து பிரட்டவும்.





பின் அதனுடன் தலா 2 ஸ்பூன் மைதா, சோள மாவு  மற்றும் 1 ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, எண்ணெய் பொரித்தெடுக்கவும்.
சீக்கிரம் எடுத்து விடவும் இல்லையென்றால் இறாலின் தன்மை மாறிவிடும்.






பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிக பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டை சேர்த்து வதக்கவும்.



பின் 1/4 கப் வெங்காயம் மற்றும்  1/4 கப் குடைமிளகாயை சேர்த்து, சிறிது அஜெனோமோட்டோ தூவி வதக்கவும்.




பின் 1 டீ.ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுது, 1 டீ.ஸ்பூன் சோயா சாஸ், சிறிது உப்பு மற்றும் சர்க்கரை  சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் இறாலை சேர்த்து, வெங்காய தாள் தூவி சூடாக பறிமாறவும்.








சில்லி இறால்


தேவையான பொருட்கள்
இறால் – ½ கிலோ
மசாலாவிற்கு:
இஞ்சிபூண்டு விழுது – 1 டீ.ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ½ டீ.ஸ்பூன்
உப்பு, மஞ்சதூள்
மிளகு தூள் – ½ டீ.ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ.ஸ்பூன்


செய்முறை



சுத்தம் செய்த இறாலுடன் மசாலாக்களை சேர்த்து பிரட்டி, ½ மணி நேரம் ஊறவைக்கவும்.


பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இறாலை போட்டு இருபுறமும் வறுத்து எடுக்கவும்.








Related Posts Plugin for WordPress, Blogger...