எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

இறால் ஆப்பம்



செய்முறை

ஆப்ப மாவிற்கு இதை அழுத்தவும்  ஆப்பம்

இறால் செய்முறை:

சுத்தம் செய்த இறாலில் சிறிது இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சதூள், உப்பு சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய
வெங்காயம் - 1
தக்காளி - 1/2 
இறால் - 1/2 கப்
தயாராக வைத்து கொள்ளவும்.



பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி வதங்கியதும் , நறுக்கிய இறாலை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் 1/4 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீ.ஸ்பூன் மல்லி தூள், 1 துளி சீரக தூள், மஞ்சதூள் ,உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை விட்டு, கொத்தமல்லி தூவி , ஆறவிடவும்.





பின் ஆறிய கலவையில் 2 முட்டை சேர்த்து கலக்கி வைக்கவும்.


பின் ஆப்ப கடாயில் மாவை ஊற்றி சுலற்றி, அதன் மேல் 1 கரண்டி இறால்முட்டை கலவையை ஊற்றி சுலற்றி, எண்ணெய் விட்டு, மூடி மிதமான தனலில் வேக வைக்கவும்.
சுவையான இறால் ஆப்பம் தயார். 

இதே முறையில் மட்டன் ஆப்பம் செய்ய:

 




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...