எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மாம்பழ ஸ்குவேஷ் / Mango squash





  
                                                                             செய்முறை

மாம்பழத்தை  தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

மாம்பழ விழுது 1 கப் என்றால் சர்க்கரை 1. 1/2  கப் மற்றும் 1 கப் தண்ணீர் எடுத்து கொள்ளலாம்.

சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும், 5 நிமிடம் பிசுக்கு பதம் வரும் வரை நன்கு கொத்திக்க விட்டு, ஆறவிடவும்.
( விருப்பப்பட்டால் சிறிது சிட்ரிக் ஆசிட் சேர்க்கலாம் )

ஆறியதும் மாம்பழ கூழை சேர்த்து கலக்கி, வடிகட்டி, சுத்தமான தண்ணீர் இல்லாத பாட்டிலில் ஊற்றி ஃப்ரிஜில் வைத்து கொள்ளவும்.

(ஸ்குவேசை வெளியிலேயே வைக்க  k.m.s powder for preservative சேர்க்கலாம்)



பறிமாறும் பொழுது 1 பங்கு ஸ்குவேஸ்   :   2 அ 2.5 தண்ணீர் சேர்த்து கலக்கி பறிமாறவும்.


கலந்த ஜூசில் 1 ஐஸ் குச்சி வைத்து ஃப்ரீசரில் வைத்து எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். (மேங்கோ ஸ்டிக் ஐஸ்க்ரீம்)

மில்க்க்ஷேக் செய்ய:

1 கப் குளிர்ந்த பாலுடன், 1/2 கப் ஸ்குவேஷ் , 4 ஐஸ்கட்டிகள், 1/4 கப் வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்சியில் விட்டு விட்டு நுரை வரும் வரை அடித்து, கப்பில் ஊற்றி, சிறிது ஐஸ்க்ரீம் போட்டு பறிமாறவும்.

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...