எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Amla Squash / நெல்லிகாய் ஸ்க்வேஷ்


Beat the heat with Amla

During summer season, Amla juice keeps your skin cool by releasing heat from the body 
and thus, preventing heat boils, rashes and acne. It also provides the body with iron, vitamin C, potassium and fibre.


தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிகாய்- 10 / Amla - 10
எலுமிச்சை பழம் - 3 / Lemon -3

சர்க்கரை / sugar 
தண்ணீர் / water


செய்முறை

நெல்லிகாயை கழுவி, இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் ( ஆவியில் ) வேகவைத்து எடுக்கவும்.
சிறிது ஆறியதும் கொட்டை இல்லாமல் பொடியாக நறுக்கி 1 கப்பில் போடவும்.

Steam cook Amla ,  allow it to cool and deseed it.
chop well.

If  chopped amla = 1 cup then take 
sugar = 1.5 to 2 cups
water = 1 cup

Dissolve sugar with water, allow it to boil till sticky consistency.
Then allow it to cool .

நெல்லிகாய் 1 கப் இருந்தால், 2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர் எடுக்கவும்.
(சர்க்கரை சேர்க்க விரும்பாதவர்கள், நாட்டு சர்க்கரை உபயோகிக்கலாம்.)

சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து , அடுப்பில் வைத்து கலந்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து பிசுக்கு பதம் வந்ததும், அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.

இந்த நேரத்தில், 
எலுமிச்சை பழத்தை கொட்டையில்லாமல் பிளிந்து சாறு எடுக்கவும்.
நறுக்கிய நெல்லிகாயுடன் இந்த சாறு சேர்த்து , 
மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

Squeeze the lemon and grind the amla with lemon extract to a fine pulp.

When the syrup comes to medium heat, add in the pulp , 
mix well and store it in air tight clean container.
( Don't strain it )
(can add some ginger paste if preferred.)
Keep in refrigerator as no preservatives are added.
use when required.


பாகு கை பொறுக்கும் சூடு வந்ததும், 
அரைத்த நெல்லிகாய் சேர்த்து கலந்து, 
ஈரம் இல்லாத பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
நெல்லிகாய் ஸ்க்வேஷ் தயார்.
விருப்பப்பட்டால் இஞ்சி விழுது சேர்க்கலாம்.

தேவையான பொழுது, 
1 பங்கு ஸ்க்வேஷிற்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து பறிமாறவும்.
பறிமாறும் பொழுது புதினா இலை நறுக்கி சேர்க்கலாம்.
அன்னாச்சிபழத்தை நறுக்கி சேர்க்கலாம்.

வெய்யில் காலத்திற்கேற்ற பானம் தயார்.

How to serve:

To 1 ratio of squash add 3 ratio of water , mix well and serve.
Can add Mint leaves / chopped pineapple while serving .




















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...