எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வெஜடபிள் சட்னி



வெஜடபிள் சட்னி







தேவையான பொருட்கள்

உளுந்து பருப்பு – 2 டே.ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டே.ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய் – 2
சிவப்பு மிளகாய் – 2
கறிவேப்பிலை , இஞ்சி , பூண்டு – சிறிதளவு
நூல்கோல் – 1, கேரட் – 1 – துருவியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
குறிப்பு: தேவைப்பட்டால் முட்டைகோஸ், டர்னிப் பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி -1/2 கட்டு
தேங்காய் – ½ கப்
புளி – நெல்லிகனி அளவு (குறிப்பு: புளி வேண்டாம் என்றால் 1 நாட்டு தக்காளி பயன்படுத்தவும்)

எண்ணெய் , உப்பு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுந்து பருப்பு , கடலை பருப்பு ,பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய் , சிவப்பு மிளகாய்
கறிவேப்பிலை , இஞ்சி , பூண்டு , நூல்கோல் , கேரட்
(தக்காளி உபயோகித்தால் , இதனுடன் முழுதாக போடவும்) இவை அனைத்தையும் வதக்கவும்.

பாதி வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.



வதங்கியதும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.





பின் தேங்காய் சேர்க்கவும்.







ஆறியதும் உப்பு , புளி வைத்து கெட்டியாக அரைக்கவும்.





இது சாதத்துடன் பறிமாறலாம்.

தோசை மற்றும் சப்பாத்தி மீது தடவி , சுருட்டி ரோலாக குழந்தைகளுக்கு பறிமாறலாம்.

கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் இட்லி மற்றும் தோசையுடன் பறிமாறலாம்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...