எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சுரக்காய் வெந்தயகீரை குழம்பு


செய்முறை

1 கப் சின்ன வெங்காயத்தை 1 ஸ்பூன் கடலைப்பருப்பு,கறிவேப்பிலையுடன் நல்லெண்ணை சேர்த்து, லேசாக வதக்கவும்.
அடுப்பை அணைத்து,1/4 கப் தேங்காய் துருவல், 1 தக்காளி, 2 டீ.ஸ்பூன் சாம்பார் பொடி, 1 ஸ்பூன் தனியா பொடியை சேர்த்து கலக்கவும். ஆறியதும் அரைத்து வைக்கவும்.



பின் ஒரு கடாயில் 1 குழிகரண்டி நல்லெண்ணை ஊற்றி, கடுகு வெந்தயம் கறிவேப்பிலை மிளகாய் தாளித்து, அதனுடன் 5 பல் பூண்டு , 1/4 கப்  வெங்காயம், 1/2  சுரக்காய் தோல் நீக்கி நறுக்கியது, உப்பு சேர்த்து வதக்கவும்.
காய் பாதி வெந்ததும்,  1 கப் வெந்தய கீரையை  சேர்த்து வதக்கி, பின் அரைத்த மசாலா விழுது சேர்த்து கலக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு,  



நெல்லிக்கனி அளவு புளியை கரைத்து ஊற்றி, கொத்தமல்லி தூவி, பச்சை வாசனை போகும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...