எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Vendakai mor kulambu / வெண்டைகாய் மோர்குழம்பு



வெண்டைகாய் மோர்குழம்பு

தேவையான பொருட்கள்

நறுக்கிய வெண்டைகாய் - 1 கப் 
மோர் - 3 கப்
உப்பு

விழுதாக அரைக்க:
ஊறவைத்த கடலைபருப்பு - 1 மேஜைகரண்டி
தேங்காய் துருவல் - 1/2கப்
பச்சைமிளகாய் -4
சீரகம்- 1/2 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு

தாளிக்க:
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உ.பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய்

செய்முறை


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, தாளிப்பு செய்து
பின் காயை சேர்த்து, நன்றாக 3/4 பதம் வேகும் வரை வதக்கவும்.



பின் அரைத்த விழுது சேர்த்து கலந்து, அதில் மோர் மற்றும் உப்பு சேர்த்து
நன்றாக காய் வேகும் வரை , மிதமான தீயில் கொதிக்க விடவும்.

சுவையான மோர் குழம்பு தயார்.
இதை சாதம், தோசை, சப்பாத்தியுடன் பறிமாறலாம்.

வெண்டைகாயிற்கு பதில் பூசணிகாய் / புடலங்காய் / சேனைகிழங்கு / வாழைக்காய் வைத்தும் செய்யலாம்.


Vendakai Mor kulambu

Heat oil and season with mustard seeds, urad dal, chanadal, curryleaves and drychillies.
Add chopped lady's finger , saute well till 3/4 done.
Add grounded paste ( coconut,chanadal.greenchillies,ginger and cuminseeds)
mix well
Then add buttermilk, salt and allow it to cook till raw smell goes and lady'sfinger is done.

A   tasty and perfect sidedish which goes well with rice, roti or dosa.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...