Instant Tiffin recipe
தேவையான பொருட்கள்
ஊறவைக்க:
கோதுமை ரவை - 1 கப்
சிவப்பு அவல் - 1/2 கப்
கடலைபருப்பு - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
உளுந்துபருப்பு, பாசிபருப்பு சேர்த்து - 1/4 கப்
மாவு அரைக்க :
சின்னவெங்காயம் - 8
வரமிளகாய் -6
சீரகம்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
நாட்டு தக்காளி - 1
மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயதூள்
அடை செய்ய:
வெங்காயம் , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ரவை, அவல் , பருப்புகளை ஒன்றாக சேர்த்து கழுவி, பின் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
1 மணி நேரம் ஊறியதும், மிக்ஸியில் வெங்காயம் , மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, ஊறவைத்த பொருட்கள் அணைத்தையும் சேர்த்து
ஒன்றாக அரைக்கவும்.
3/4 பதம் அரைத்ததும், தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
(மிகவும் வழுவழுப்பாக இல்லாமல் அரைத்து வைக்கவும்.)
இந்த மாவு புளிக்க தேவையில்லை, உடனடியாக செய்யலாம்.
தோசைக்கல்லில் அடை ஊற்றி, விருப்பப்பட்டால் மேலே வெங்காயம் தூவி, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
(குறிப்பு: மாவை கல்லில் ஊற்றியதும் , வெங்காயத்தை தூவி, உடனே கரண்டியால் தேய்க்கவும், வெங்காயம் மாவோடு நன்றாக ஒட்டிகொள்ளும்)
மொறுமொறு அடையை தேங்காய் சட்னி, தக்காளி கடைசல் வைத்து பறிமாறலாம்.
Wheatrava Red poha Adai - Instant recipe
To 1 cup of wheatrava , add 1/2 cup of Redpoha, 1/4 cup of bengalgram and toordal each,
2 spoons of uraddal and moong dal each.
Rinse and allow it to soak with good water ( as the same water used here for grinding)
for 1 hour.
Then grind it with onions, redchillies, cuminseeds, curryleaves to 3/4 level.
( as shown in picture)
Then add tomato, turmeric powder, salt and asafoetida.
Grind to a coarse batter.
No need to ferment the batter.
Can prepare adai , immediately.
If need sprinkle onions on top for extra taste.
Serve hot with coconutchutney / Tomato kadaisal
No comments:
Post a Comment