எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Pidi Karunai Kulambu / பிடிகருணை குழம்பு



செய்முறை

கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, அதில்
1 கப் சின்ன வெங்காயம், 4 பல் பூண்டு,
கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், அடுப்பை அணைத்து
2 டீஸ்பூன் சாம்பார் பொடி ,  
1 தக்காளி, 1/4 கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து,
ஆறியவுடன் , விழுதாக அரைக்கவும்.


Heat some gingelly oil,
add a cup of onions, 4 garlic pods, curryleaves and pepper.
Saute well.
Once onions are sauted, Switch off the flame and
add 2 tsps of Sambar powder,
tomato and 1/4 cup of shredded coconut.
mix well, let it cool, grind to a paste.


Meanwhile

சுத்தம் செய்த பிடிகருனையை, 
குக்கரில் தண்ணீர் மற்றும்
புளி சிறிதளவு சேர்த்து, 1 விசில் விடவும்.
தோல் நீக்கி, நறுக்கவும்.



பின் கடாயில் எண்ணெய் விட்டு,
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து,
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின் அரைத்த விழுதை தண்ணீர் சேர்த்து கலந்து, ஊற்றவும்.
உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

நன்றாக கொதித்ததும், 
எலுமிச்சை அளவு புளியை கரைத்து சேர்க்கவும்.
கிழங்கை சேர்த்து கலந்து , 5 நிமிடம் மூடி வைத்து, 
பின் அடுப்பை அணைக்கவும்.

சாதம் , இட்லி, தோசையுடன் பறிமாறலாம்.



Meanwhile cook the yam with some tamarind in cooker.
Leave 1 whistle.
Then peel the skin , cut it to pieces.

Heat some oil in kadai, 
season with Mustardseeds, methiseeds, curryleaves and drychilly.
Add few small onions and garlic, saute well.
Add the grounded paste with some water diluted.
Add salt, Close and allow it to boil till tomato's raw smell goes off.

Then add tamarind extract ( from lemon sized tamarind ), yam pieces, mix
and close with lid for 5 minutes.
Once done, Switch off the flame.
Serve with Rice / Idli / Dosa.....







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...