எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Red Poha Kesari / சிவப்பு அவல் கேசரி



தேவையான பொருட்கள்

சிவப்பு அவல் - 1 கப் 
தண்ணீர் - 3 கப்
சர்க்கரை - 1.5  கப்
ஏலக்காய்-4
குங்குமப்பூ- சிறிதளவு

நெய் - 1/4 கப்
முந்திரி , கிஸ்மிஸ்



செய்முறை

குங்குமப்பூவை சூடான தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

அவலை வெறும் வாணலியில், 
லேசாக பொறியும் சத்தம் வரும் வரை வறுத்து, 
ஒரு தட்டில் கொட்டி , ஆற விடவும்.

பின் மிக்சியில் போட்டு, ஏலக்காய் சேர்த்து, 
ரவை பதம் (விட்டு விட்டு) அரைக்கவும்.


Soak the saffron with hot water.

Dry roast a cup of redpoha till crispy sound, 
allow it cool and grind with 4 cardamoms to rava consistency.


Then

பாதி நெய்யில் முந்திரி , கிஸ்மிஸ் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் , பொடித்த அவலை சேர்த்து நன்றாக வறுக்கவும்

பின் 3 கப் (சுடு )தண்ணீர் சேர்த்து கொண்டெ கிளறவும்.
குங்குமப்பூ சேர்த்து, சிம்மில் வைத்து, மூடி வைக்கவும்.
ரவை வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

சர்க்கரை உருகி, கொதித்து, கெட்டியாகும் பொழுது,
மீதி நெய் மற்றும் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்.

அடுப்பை அணைத்து , 5 நிமிடம் மூடி வைத்து , பின் பறிமாறவும்.




In half the ghee ( mentioned ), fry cashews then Kismis  and keep aside.

In the same ghee , add poha rava, mix well till aroma comes.
Then
Add 3 cups of hot water, saffron , mix  well.
Close and cook in simmer till done.
Once water is absorbed, add a cup of sugar ( can increase sugar if required )
Mix well, till it becomes thick.
Finally add remaining ghee and fried nuts.
Mix, close with lid for 5 mts and then serve.

Can substitute Sugar with Jaggery / brown sugar.....







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...