எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Jackfruit Briyani / பலாகாய் ப்ரியானி



தேவையான பொருட்கள்

பலாகாய் - 1 சிறியது



பாஸ்மதி அரிசி - 1.5 கப்
தண்ணீர்  - 2.5 கப்
உப்பு


மசாலா பிரட்ட :

{   இஞ்சிபூண்டு விழுது - 2 டீ.ஸ்பூன்

பொடி செய்த:
பட்டை , கிராம் - தலா 4 
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
ஏலக்காய்-2

மற்றும் 

தயிர் - 1/4 கப்
மஞ்சள்தூள்
மிளகாய் தூள் - 1/4 டீ.ஸ்பூன்
பச்சைமிளகாய் -2
மல்லிதூள்- 1/2 ஸ்பூன்
உப்பு
பெரிய தக்காளி - 1 நறுக்கியது
புதினா, கொத்தமல்லி - 1/2 கப்   }




தாளிக்க: 

எண்ணெய் - 1 குழிகரண்டி
பட்டை, கிராம், ஏலக்காய், கல்பாசி, பிரிஞ்சி இலை,..

வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கவும்


செய்முறை

கை மற்றும் கத்தியில் தேங்காய் எண்ணெய் தடவி,
காயை குறுக்கே பாகங்களாக வெட்டவும்.
பின் தோல் மற்றும் நடுவில் இருக்கும் தண்டை நீக்கி, 
சிறு துண்டுகளாக நறுக்கி,
எண்ணெயில் 3/4 பதம் வேகும் வரை பொறித்தெடுக்கவும்.

Apply Coconut oil in hand and on knife.
Cut the Jackfruit, remove the stem in center as well as outer skin well.
Cut in to cubes and deep fry in oil till 3/4 th done.


Then Marinate the fried jackfruit with g.g paste, powdered masala, curd,
green chillies, salt, turmeric powder, chilly powder, dhaniyapowder , mint , 
coriander leaves and tomato pieces.
keep aside .
More the marination time, More the taste will be.



பொறித்த பலாகாய் துண்டுகளுடன், மேலே குறிப்பிட்டுள்ள மசாலாகளை
சேர்த்து பிரட்டி, நன்றாக ஊறவிடவும்.

பின்

குக்கரில் எண்ணெய் விட்டு, மசாலா பொருட்களை தாளிக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து , நன்றாக வதக்கவும்.
நன்றாக பொறிந்ததும், பிரட்டி வைத்த கலவையை சேர்த்து,
பிரட்டி, மிதமான தனலில் , தக்காளி கரையும் வரை வதக்கவும்.

மசாலா திரண்டு வரும் பொழுது, 
தண்ணீர் , உப்பு, ஊறவைத்த அரிசி, சிறிது நெய் சேர்த்து கலந்து,
கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்கும் பொழுது, அடுப்பை முழு சிம்மில் வைத்து,
குக்கரின் மூடி(விசிலுடன்) போட்டு,
10 நிமிடம் விட்டு, அடுப்பை அணைக்கவும்.
சுவையான பலாகாய் ப்ரியானி தயார்.



Heat Oil in cooker and season with whole garam masalas.
Add sliced onions, fry till golden brown.

Add the marinated masala jackfruit, saute well till tomato is done.
Then add water, salt, soaked rice, ghee, mix well.
Allow it to boil.
Once it starts boiling, keep in deep sim flame.
Cover the cooker and leave for 10 minutes.
Tasty briyani is ready.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...