எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Radish Mint Chutney / முள்ளங்கி புதினா சட்னி



தேவையான பொருட்கள்

முள்ளங்கி - 1
புதினா - 1 கப்
தேங்காய் - 1/2 மூடி
காய்ந்த மிளகாய் - 3 முதல் 5
உளுந்து பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
புளி - சிறு துண்டு
கறிவேப்பிலை
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு




செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, உளுந்து மற்றும் கடலை பருப்பு 
சேர்த்து வறுக்கவும்.
பின் துருவிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும், 

காயில் உள்ள நீர்தன்மைவற்றி காய் வெந்ததும், 
புதினா கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து 
வதக்கி, அடுப்பை அணைக்கவும்.

உடனே தேங்காயை சேர்த்து கலக்கி, 
புளி , உப்பு சேர்த்து, 
ஆறியதும் , அரைக்கவும்.


இட்லி , தோசை, சப்பாத்தி, ப்ரெட், சாதம் இவற்றுடன் பறிமாறலாம்.



Radish Mint Chutney

Heat 2 tsps of oil in a kadaai, add 2 tsps of uraddal and chanadal each.
Roast till golden brown.
Add a Radish ( grated ), Saute well till done.
Add a cup of mint leaves, 2 garlic flakes and curryleaves, saute lightly.
Switch off the stove.
Immediately add shredded coconut, salt and a small piece of tamarind.
Mix well and allow it to cool.
Grind well to a thick chutney.

Can be served with Idly, Dosa, Chapathi, Bread , Rice,........







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...