எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

இறால் தொக்கு









இறால் – ¼ கிலோ(சுத்தம்  செய்து 1 ஸ்பூன் என் கறிமசாலா பொடி,உப்பு,மஞ்ச தூள் சேர்த்து  1/2 மணி நேரம்  ஊற  வைக்கவும்  )
பெரிய வெங்காயம்- 1
தக்காளி – 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு
பச்சை மிளகாய் – 2

மசாலா அரைக்க:

சிறிய வெங்காயம் -10
இஞ்சி – சிறிது
பூண்டு – 4 பல்

மசாலா பௌடர் – 1 மேஜை கரன்டி ( பொடி வகைகள் லிங்க்யை பார்க்கவும்)




முதலில் கடாயில் 2 மே.கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் சிறிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.


வதங்கியதும் அடுப்பை அணைத்து , மசாலா பொடியை போடவும். ஆறியதும் அரைத்து வைக்கவும்.







பின் வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுகிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.


பின் தக்காளி போட்டு, அதனுடன் சிறிது உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.


தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.





பின் தேவையான தண்ணீர் விட்டு, உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் .




பின் இறாலை போட்டு குறைந்த தீயில் 2 நிமிடம் சமைக்கவும். நீண்ட  நேரம் சமைத்தால்  ரப்பர் போல்  ஆகிவிடும்.


இது செமி கிரேவி பதம் வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு: இது சப்பாத்தி, தோசை, சாதம், தயிர் சாதம் உடன் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...