எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

குஸ்கா ( பிரியாணி )

செய்முறை

1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, பின் 2 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.

அரிசி ஊறும் சமயத்தில், மற்ற பொருட்களை தயாராக்கி கொள்ளவும்.


பின் குக்கரில் 1 குழிகரண்டி எண்ணெய் விட்டு, 2 பட்டை, கிராம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து, 1 பெரிய வெங்காயம் நறுக்கியதை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

சீரக தூள் - 1/4 டீ.ஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீ.ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீ.ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீ.ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/2 டீ.ஸ்பூன்

வெங்காயம் வதங்கியதும்,

நறுக்கிய 1 தக்காளி, பச்சை மிளகாய், 1 டே.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, புதினாகொத்தமல்லி,  மேலே குறிப்பிட்டுள்ள தூள்கள், 1 கரண்டி தயிர் , இவை அணைத்தையும் ஒன்றாக சேர்த்து,  நன்கு வதக்கவும்.

பின்

ஊறிய அரிசியை அதே நீருடன் சேர்த்து, உப்பு, 1 ஸ்பூன் நெய்,கொத்தமல்லி தூவி , ஹையில் 1 விசிலும், முழு சிம்மில் 5 நிமிடம் விட்டு, அடுப்பை அணைக்கவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...