எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Adai / அடை தோசை


தேவையான பொருட்கள்
புழுங்கரிசி – 1 கப்
பச்சரிசி – ½ கப்
துவரம் பருப்பு, பாசிபருப்பு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு-  அணைத்தும் கலந்து 1 கப்



சின்ன வெங்காயம் – ½ கப்
தக்காளி – 1
தேங்காய் துருவல் – ¼ கப்
காய்ந்த மிளகாய் - 5
சீரகம், கறிவேப்பிலை – சிறிது
மஞ்சதூள், உப்பு



தாளிக்க:
கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
கொத்தமல்லி தழை – ½ கட்டு





செய்முறை

அரிசியையும் பருப்புகளையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.


பின் அரிசியை சின்ன வெங்காயம் , தக்காளி ,தேங்காய் துருவல் ,காய்ந்த மிளகாய் ,சீரகம், கறிவேப்பிலை சேர்த்து மாவாக அரைக்கவும். பின் அதனுடன் பருப்புகளை சேர்த்து மாவாக அரைத்து மஞ்சதூள், உப்பு சேர்த்து கலக்கி சிறிது புளிக்க வைக்கவும்.



புளிக்க வைக்காமலும் செய்யலாம். சிறிது புளித்தால் சுவை கூடும்.
பின் லேசான தோசைகளாவும் சுடலாம்.


சுவையைக் கூட்ட, கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் மிக பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி மாவுடன் சேர்க்கவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையும் சேர்க்கவும்.


பின் அடைகளாக சுட்டு, தேய்த்து விட்டு திருப்பிப் போடவும்.
நன்கு எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக சுட்டு, சூடாக பறிமாறவும்.
இது தேங்காய் சட்னி, அவியல், வெண்ணெய், தக்காளி தொக்குடன் மிக சுவையாக இருக்கும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...