எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தக்காளி குழம்பு




செய்முறை




முதலில் 1 கப் சின்ன வெங்காயம், 1 ஸ்பூன் கடலை பருப்பு, கறிவேப்பிலையை , 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும்.



பின் அதனுடன் 4 அ 5 தக்காளி நறுக்கியதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் அடுப்பை அணைத்தவுடனே  மஞ்சதூள், என் கறிமசாலா பொடி (பொடி லிங்கை பார்க்கவும்) 3 டே.ஸ்பூன்
சேர்க்கவும்.



பின் 1/4 கப் தேங்காய் சேர்த்து , ஆறியவுடன் அரைக்கவும்.



பின் தாளித்து, வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுது, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
குழம்பு பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவவும்.




இட்லி , தோசை, சாதத்துடன் பறிமாறலாம்.


தக்காளி குழம்பு





Related Posts Plugin for WordPress, Blogger...