எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வேர்கடலை சிக்கி / Peanut chikki



செய்முறை



பின் 1 கப் வெல்லத்தில், 1/4  கப் தண்ணீர் சேர்த்து, கரைத்து வடிகட்டவும்.


பின் அதை வாணலியில் ஊற்றி  பந்து பதம் பாகு வரும் வரை, குறைந்த தீயில் கிளறவும்.




குறிப்பு: பாகின் வகைகள்

பாகை கையில் தொட்டு , விட்டு விட்டு பார்த்தால் ஒரு கம்பி வரும், அது ஒற்றை கம்பி .


பாகை கையில் தொட்டு , விட்டு விட்டு பார்த்தால் இரு கம்பி வரும், அது இரட்டை  கம்பி .

அதற்கு பின் பாகு சிறிது கெட்டி படும், அப்பொழுது ஒரு துளி தண்ணீரில் விட்டால்,  மேலே உள்ள படத்தில் இருப்பது போல், கரையாமல் , கையில் எடுத்தால் பந்து போல் உருட்ட வரும். 

அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.





அதில் 2 கப் வேர்க்கடலை (வறுத்து, ஒரு அடி மிக்சியில் விடவும்.) சேர்த்து கிளறி,  நெய் தடவிய தட்டில் கொட்டி,  கட் செய்யலாம்


அல்லது கைப்பொருக்கும் சூடு வந்தவுடன் , கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.

இதே முறையில் எள், முந்திரி பருப்பு, பொட்டுகடலையிலும் செய்யலாம்.




Related Posts Plugin for WordPress, Blogger...