எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சிக்கன் பிரியானி / Chicken briyani







தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப் (200 கி)
சிக்கன் – 250 கிராம்

பட்டை , லவங்கம், ஏலக்காய், சோம்பு – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டே. ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2
காஸ்மீரீ மிளகாய் தூள் – 1 டீ.ஸ்பூன்

வெங்காயம் -1
தக்காளி – 1


புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி
உப்பு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
நெய் -1 டே.ஸ்பூன்


சிக்கனை ஊறவைக்க:
தயிர் – 1 டே.ஸ்பூன்
உப்பு, கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு

இவ்வாறு சிக்கனை ஊறவைப்பதால் அது வெந்ததும் மிருதுவாக இருக்கும். இதே போல் மட்டனை செய்தால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.


செய்முறை:

முதலில் சிக்கனை ½ - 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயத்தை எண்ணையில் பொறித்தெடுத்து , தனியாக வைக்கவும்.

பின் குக்கரில் எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை , லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.


பின் பாதி புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி,





ஊறிய சிக்கன் மற்றும் சோம்பு போட்டு நன்கு வதக்கவும்.





அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் காஸ்மீரீ மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.



பின் தக்காளி மற்றும்






ஊறவைத்த அரிசி போட்டு மெதுவாக கலக்கவும்.



(குறிப்பு: அரிசியை கழுவி, பின் 1 கப் அரிசிக்கு, 2 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அத்தண்ணீரை வடிகட்டி அரிசியை மேலே கூறியவாறு கலக்கவும். இவ்வாறு செய்யும் போது சாதம் உதிறியாக வரும்.)


அரிசியை உடையாமல் கலக்கியதும், வடித்த தண்ணீர் ஊற்றி, பொறித்த வெங்காயம் பாதி, உப்பு, நெய் மற்றும் புதினா, கொத்தமல்லி போடவும்.
கிளறி மூடவும்.

ஹையில் ஒரு விசில் வந்ததும் தீயை முழுதாக குறைத்து 5 நிமிடம் விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின் பொறித்த வெங்காயம் தூவி பறிமாறவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...