எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தக்காளி சட்னி (2 வகையில்)

இவ்விரு சட்னியும் இட்லி,தோசை, சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும்.

தக்காளி சட்னி- 1



தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி  2
சீரகம் – ½ டீ.ஸ்பூன்
தனியாதூள் – 1 டே.ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-4
கறிவேப்பிலை
தேங்காய் துருவியது- 1/4 கப்
உப்பு

எண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், சீரகம்,கறிவேப்பிலை, மிளகாயை வதக்கவும்.

பின் அதில் தக்காளியுடன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி ,
அடுப்பை அணைத்து, தனியாதூள், தேங்காய் சேர்த்து , ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.







தக்காளி சட்னி - 2

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி  3 அ 4
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை 
கடுகு
உப்பு
எண்ணெய்

செய்முறை


ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து,வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாயை வதக்கவும்.

பின் அதில் தக்காளி, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி , அடுப்பை அணைத்து,


(இதில் தண்ணீர் தெளித்து கொதிக்கவைத்தால்,
அப்படியே சப்பாத்தியுடன் பறிமாறலாம்)

இல்லை , வதக்கியதை ஆறியவுடன் அரைக்கவும்.













No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...