எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மோதகம்



பூரணம் செய்ய :

1 கப் தேங்காய் துருவலுடன், 1 கப் வெல்லம் சேர்த்து கிளறவும்.
அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து, நன்கு திரண்டு வரும் வரை கிளறி, அடுப்பை அணைத்து, ஆற விடவும்.












மேல் மாவு செய்ய:
அரிசி – 1 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – ¼ டீ.ஸ்பூன்

செய்முறை

அரிசியை நன்கு ஊறவைத்து, தண்ணீரை வடித்து, மிக்சியில் அரைக்கவும். அரிசி பொடியானவுடன், 1 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.

 ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து, உப்பு மற்றும் அரைத்த மாவை ஊற்ற ஊற்ற கிளறவும்.





நன்கு திரண்டு சப்பாத்தி மாவு போல் வந்தவுடன் , அடுப்பை அணைத்து ,ஆறவிடவும்.

மோதக அச்சை எடுத்து உள்ளே நெய் தடவவும் , பின் முதலில் மாவை உள்ளே சமமாக ஓரங்களில் வைத்து அமுக்கவும்.நடுவில் பூரணத்தை வைத்து, மீண்டும் சிறிது மாவு வைத்து மூடவும்.( அச்சை இரண்டாக திறந்து மோதகத்தை வெளியே எடுக்கவும்.)





பின் இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...