எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பருப்பு கொழுகட்டை



தேவையான பொருட்கள்

பருப்பு வெல்லம் அரைத்தது(http://neelavinsamayalarai.blogspot.in/2013/09/4-1.html)

மேல் மாவு செய்ய:
அரிசி – 1 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – ¼ டீ.ஸ்பூன்

செய்முறை

அரிசியை நன்கு ஊறவைத்து, தண்ணீரை வடித்து, மிக்சியில் அரைக்கவும். 


அரிசி பொடியானவுடன், 1 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.






ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து, உப்பு மற்றும் அரைத்த மாவை ஊற்ற ஊற்ற கிளறவும்.


நன்கு திரண்டு சப்பாத்தி மாவு போல் வந்தவுடன் , அடுப்பை அணைத்து ,ஆறவிடவும்.

(குறிப்பு: இந்த மாவை முறுக்கு பிடியில் போட்டு,இட்லி பாத்திரத்தில் பிளிந்தால், இடியாப்பம் தயார்.)

பின் மாவை உருட்டி, இரு சீட்டின் நடுவே வைத்து ( சீட்டில் ஆயில் தடவவும்) , ஒரு கப்பால் அமுக்கி எடுக்கவும்.



பின் பூரணத்தை வைத்து, இரண்டாக மடக்கி, ஓரங்களை ஒட்டி விடவும்.




பின் இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.








2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...