எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஜாம் / Mixed Fruit jam

ஜாம்








ஆப்பிள், மாதுளை, திராச்சை, பப்பாளி, கொய்யா, பைன்னாப்பிள், எலுமிச்சை சாறு(1) – தேவையான அளவு எடுத்து அரைத்து வடிகட்டவும்.

எலுமிச்சையில் சிட்ரிக் தன்மை உள்ளதால் , இதுவே ப்ரிசெர்வேடிவாக இருக்கும்.

பழச்சாறு 1 கப் என்றால் , 1 கப் சர்க்கரை சேர்க்கவும்.



செய்முறை:
முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் பழச்சாறு, சர்க்கரை மற்றும் ரெட் கலர் சேர்த்து  கிளறவும்.




மிதமான தனலில் செய்யவும்.



சாஸ் பதம் வரும் வரை கிளறவும்.






பதம் பார்க்க:
 ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து, ஜாமை ஒரு துளி ஊற்றினால் கரையாமல் பந்து போல் வரும். அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.







பின் ¼ ஸ்பூன் மல்டிஃப்ருட்ஸ் எசென்ஸ் சேர்த்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றவும்.







குறிப்பு: ஊற்றும் பொழுது மரகட்டையின் மேல் பாட்டிலை வைத்து ஊற்றவும், ஏனென்றால் சூட்டில் பாட்டில் க்ரேக் ஆகிவிடும்.




ஆறியதும் ஃப்ரிஜில் வைக்கவும்.
(ப்ரிசர்வேடிவ்( கே.எம்.எஸ் பௌடர்) சேர்த்தால் ஃப்ரிஜில் வைக்க தேவையில்லை)

ஆறினால் கெட்டியாகி விடும்.


குறிப்பு:

1. நமக்கு பிடித்த பழங்களை போடலாம்.
ஏதேனும் ஒரு பழத்தில் செய்யலாம்.

2. பதம் பார்க்க:

ஒரு கப்பில் தண்ணீர் எடுத்து, ஜாமை ஒரு துளி ஊற்றினால் கரையாமல் பந்து போல் வரும். அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.

3. ஆப்பிள் , கொய்யாவில் பெக்டின் தன்மையுள்ளதால் அதுவே திக்கனிங்ஏஜன்டாக செயல்படும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...