எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பூண்டு ஊறுகாய்





தேவையான பொருட்கள்:





பூண்டு நறுக்கியது – 1 கப்

 (200 மி.லி கப்பில்)







எலுமிச்சை சாறு – ¼ கப்

(50 மி.லி)



மிளகாய் தூள் - ¼ கப்(50 மி.லி)


கல் உப்பு – 40 மி.லி

நல்லெண்ணை – 100 மி.லி

கடுகு - தாளிக்க


விருப்பபட்டால் சிறிது வெல்லம், மஞ்சள் தூள் 

சேர்க்கலாம்.

வறுத்து பொடி செய்ய:


சீரகம்- ¾ டீஸ்பூன்

வெந்தயம்- ¾ டீஸ்பூன்

மல்லிவிதை- ½ டீஸ்பூன்



இம்மூன்றையும்

வெறும் வானலியில் தனித்தனியாக , மிதமான

தனலில் வறுத்து பொடி செய்யவும்.



பெருங்காயத்தூள் – ¼ 

டீஸ்பூன்










செய்முறை:


1.  ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றி, கடுகு தாளிக்கவும்.



2.  பின் பூண்டை சேர்த்து, 1 நிமிடம் லேசாக வதக்கவும்.



3.
பின் அடுப்பை அணைத்து விட்டு, மிளகாய் தூள் , கல் உப்பு, பெருங்காயம், பொடித்த பொடியை சேர்க்கவும்.






4.  பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.



















   5.  ஆறியவுடன் ஒரு சுத்தமான பாட்டிலில்     போடவும்.
சுவையான ஊறுகாய் ரெடி.














No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...