எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ராகி (கேள்வரகு) கலி / Raagi kali

ராகி கலி



தேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப்
உப்பு – ½ தேக்கரண்டி
தண்ணீர் – 4 கப்

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
மாவை 1 கப் தண்ணீரில் கரைத்து , கொதிக்கும் நீரில் ஊற்றவும்.




மிதமான தீயில் கட்டியில்லாமல் மரக்கரண்டியால் கிளறிவிடவும்.
நன்று வெந்து திரண்டு வரும் பொழுது, அடுப்பை அணைத்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.


குறிப்பு:பதம் அரிய , கரண்டியில் எடுத்து விட்டால் உடனே விழாது.கையை நீரில் நனைத்து கலியை உருட்டினால் நன்கு ஒட்டாமல் உருட்ட வரும்.


இதனை சூடாக கீரை மசியல் (அ) தக்காளி கத்தரிக்காய் மசியல் (அ) கருவாடு கத்தரிக்காய் குழம்புடன் சூடாக பறிமாறவும்.

ஆறியபின் கையில் தண்ணீர் நனைத்து உருட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தயிர் மோருடனும் சாப்பிடலாம்.

வேறுமுறை:தண்ணீர் கொதிக்கும் பொழுது , மாவை கரைக்காமல் அப்படியே போடவும், மிதமான தீயில் வைத்து, 2 நிமிடத்திற்கு பின் கட்டியிலாமல் ஒரு மரக்கரண்டியால் கிளறவும்.
நன்று வெந்து திரண்டு வரும் பொழுது, அடுப்பை அணைத்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.
குறிப்பு:பதம் அரிய , கரண்டியில் எடுத்து விட்டால் உடனே விழாது. கையை நீரில் நனைத்து கலியை உருட்டினால் நன்கு ஒட்டாமல் உருட்ட வரும்




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...