எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் மார்பில் கேக்




சாக்கலேட் மார்பில் கேக்

1. முதலில் ஓவனை ப்ரீஹீட் செய்யவும்.






2. கேக் டின்னை வெண்ணை தடவி, மைதா மாவை பரவலாக தூவி தட்டிவிடவும்.








3. 2 முட்டையை நன்கு அடிக்கவும்.








4. இதனுடன் 50 கிராம் சர்க்கரை தூள் சேர்த்து அடிக்கவும்.







5. இதனுடன் ½ டீஸ்பூன்

சாக்கலேட் எசன்ஷ் சேர்க்கவும்.







6. பின் 100 கிராம் மைதாவுடன் ½ டீஸ்பூன் பேக்கிங்க் பௌடர் சேர்த்து (3 முறை சலித்த) மாவை மேல்கலவையுடன் சேர்க்கவும்.






7. 3 டேபிள்ஸ்பூன் ஆயில் சேர்த்து கலக்கவும்.






8. இக்கலவையில்  பாதியை கேக் டின்னில் ஊற்றவும்.






பின் உருக்கிய சாக்கலேட்டை கொஞ்சம் ஊற்றி பரப்பவும்.




9. பின் மீதி பாதியை கேக் டின்னில் ஊற்றவும். பின் உருக்கிய சாக்கலேட்டை கொஞ்சம் ஊற்றி பரப்பவும்.




10.பின் 180*செ ,20 நிமிடம் பேக் செய்யவும்.


குறிப்பு: ஒரு கத்தியால் நடுவில் குத்தினால்,எதுவும் ஒட்டாமல் வரனும்.




பின் கேக்கை சிறிது நேரம் ரேக்கில் ஆறவிட்டு , கட் செய்து பறிமாறவும்.








சாக்கலேட் உருக்கும் முறை:


பார் சாக்கலேட் (அ) கேட்பரீஸ்  :  கட் செத்து ஒரு பௌலில் போட்டு


ஓவனில் 1 நிமிடம் வைத்தால் உருகி விடும்.



முக்கிய குறிப்புகள்:

 அனைத்து பொருட்களும் ரூம் டெம்பரேசரில் இருக்க வேண்டும்.

கேக் கலவையை கலந்தவுடன் , பேக் செய்யவும்.

மாவு சேர்த்தவுடன் லேசாக அடிக்கவும்.




வேறுமுறை கலவை :
    
 டீ கேக்:

1. 50 கிராம் வெண்ணை + 2 முட்டை = அடிக்கவும்.

2.      50        கிராம் சர்க்கரை தூள் சேர்த்து அடிக்கவும்.

3.       ½ டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஷ் சேர்க்கவும்.

4.       பின் 100 கிராம் மைதாவுடன் ½ டீஸ்பூன் பேக்கிங்க் பௌடர் சேர்த்து (3 முறை சலித்த) மாவை மேல்கலவையுடன் சேர்க்கவும்.

5.       2 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, மேல் கூறிய முறையில் பேக் செய்யவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...