எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மீன் குழம்பு


மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

சிறிய வெங்காயம் – ½ கப்
பெரிய வெங்காயம் – ½ கப்
ஜீரகம் – 1 டீ.ஸ்பூன்
மிளகு – ½ டீ.ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மல்லிதூள் – 1 டே.ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்

தக்காளி -1
தேங்காய் துருவல்- 2 மே.கரண்டி


½ கிலோ மீனுக்கு
புளி 1 எலுமிச்சை பழம் அளவு

மீனை சுத்தம் செய்து,
சாம்பார் தூள் 1 டி. ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்
உப்பு- 1 டீ.ஸ்பூன்  சேர்த்து ½ மணி நேரம் ஊற வைக்கவும்.இது போல் செய்தால் மீனின் பச்சை வாசனை குழம்பில் ஏறாது.மீனும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.



தாளிக்க:
நல்லெண்ணை 2 மே.கரண்டி
கடுகு, வெந்தயம் – ¼ டி. ஸ்பூன்
பூண்டு – 5 பல்
வெங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்





செய்முறை:



முதலில் வெங்காயம், சீரகமிளகு மிளகாயை லேசாக வதக்கவும்.






பின் அடுப்பை அணைத்து மல்லிதூள், தக்காளி, தேங்காய் மற்றும் சாம்பார் தூளை(சிறிது) சேர்த்து,








ஆறியவுடன் அரைக்கவும்.





பின் ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
பின் வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும்.


பின்  அரைத்த விழுதை போட்டு , உப்பு சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு , கொதி வரும் பொழுது


புளி தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.






பின் மீனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தனலில் வேகவைக்கவும்.






கொத்தமல்லி தூவி பறிமாறவும்.






குறிப்பு:

மீன் குழம்பு செய்யும் பொழுது, அகலமான கடாயில் செய்யவும். மீன் உடையாமல் இருக்கும்.
அதிமாக கிளற கூடாது.

மீன் குழம்பை செய்தவுடன் உள்ள ருசியைவிட  , சிறிது நேரம் கழித்தால் நன்கு சுவை கூடியிருக்கும்.

கெளங்கா, சங்கரா, மத்தி, ஷீலா, வஞ்சரம், வவ்வால் மீன் முதலிய மீன்கள் குழம்புக்கு சுவையாக இருக்கும்.

பெரிய வெங்காயம் பதில் முழுக்க முழுக்க சின்ன வெங்காயம் உபயோகித்தால் சுவை நன்றாக இருக்கும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...