எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் பேஸ்ட்ரி




செய்முறை







க்ரீம் - 1 கப்
   ஐசிங்க் சர்க்கரை - 1/2 கப்



இவ்விரண்டையும் நன்கு முட்டை அடிப்பானால் கெட்டி க்ரீம் ஆகும் வரை அடிக்கவும்.
பிறகு 1 ஸ்பூன் வென்னிலா எச்ன்ஸ் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு:  ஒரு பெரிய கப்பில் ஐஸ் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் க்ரீமை வைத்து அடிக்கவும், இல்லைஎன்றால் க்ரீம் திரிந்து போக வாய்ப்பு உள்ளது.





பின் கேக்கை இடையில் வெட்டி வைத்து கொள்ளவும்.
குறிப்பு:  கேக்கின் அடியே சுற்றியும் பட்டர் பேப்பர் வைக்கவும், கேக் டிசைன் செய்ததும் எடுத்து விடவும், க்ரீம் ப்லேட் அல்லது கேக் போர்டின் மேல் படாமல் இருக்கும்.



சிறிது சர்க்கரை பாகில், கோக் கலந்து, கேக்கின் மேல் நன்கு தெளித்து விடவும்.




க்ரீமை தடவி, மீண்டும் கேக் பீஸை வைத்து, சர்க்கரை தண்ணீர் தெளித்து விட்டு,

அதன் மேல் க்ரீம் போடவும்.
துருவிய சாக்கலேட்டை தூவவும்.




பின் பைபிங்க் செய்து, ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து, (க்ரீம் நன்கு செட் ஆகி விடும்)   பிறகு வெட்டவும்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...