எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஃப்ரூட்ஸ் கேக்



தேவையான பொருட்கள்

மைதா - 100 கிராம்
வெண்ணெய் - 100 கி
சர்க்கரை - 100 கி
முட்டை - 2
பேக்கிங்க் சோடா - 1 டீ.ஸ்பூன்
பட்டை பொடி - 1 டீ.ஸ்பூன்

உலர் திராச்சை, பருப்புகள், டூடி ஃப்ரூட்டி - 200 கி
எலுமிச்சை தோல் துருவியது - சிறிது

கேரமலைஸ் செய்ய , சர்க்கரை - 50 கி

விருப்பப்பட்டால் சிறிது மிக்சட் ஃப்ரூட் எசன்ஸ் சேர்க்கலாம்.


செய்முறை




மைதா மாவுடன் பேக்கிங்க் சோடா சேர்த்து 3 முறை சலிக்கவும். பின் அதனோடு ட்ரை ஃப்ரூட்ஸ்சை கலந்து வைத்து கொள்ளவும்.



பின் ஓவனை ப்ரீ ஹீட் செய்யவும். கேக் டின்னை வெண்ணெய் தடவி, மாவை தூவி தட்டி வைக்கவும்.


கேரமல் செய்ய:

வெறும் வாணலியில் 50 கி  சர்க்கரையை சேர்த்து, சூடு செய்த்து  தேன் நிறம் வரும் வரை விட்டு நிறுத்தவும்.


அடுப்பை அணைத்ததும் சிறிது தண்ணீரை தெளித்து கலக்கவும், இல்லையென்றால் சூட்டிற்கு கெட்டி ஆகி விடும்.


பின் 

முட்டையை நன்கு அடித்து வைக்கவும்.



வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை நன்கு க்ரீமாக அடிக்கவும்.


அதனுடன் கேரமல் சிரப்பை சேர்த்து கலக்கவும்.


பிறகு அடித்து வைத்த முட்டையை சேர்த்து , ஒரே புறமாக கலக்கவும்.



பின் மாவு கலவையை சேர்த்து கலக்கவும்.




அதனுடன் பட்டை பொடியை சேர்த்து கலக்கி, கேக் டின்னில் போடவும்.




180* செ    , 30 முதல் 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.



ஒரு கத்தியை வைத்து குத்தினால் , ஒட்டாமல் வரும், பின் அதை ஒரு வயர் ரேகின் மேல் வைத்து ஆற விட்டு கட் செய்யவும்.











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...