எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

டபுள் சாக்கலேட் குக்கீஸ்


செய்முறை

180 கி செல்ஃப்  ரைஸிங்க்  மாவு  (அல்லது மைதா + 1 ஸ்பூன் பேக்கிங் தூள்)
20 கி  கோகோ பொடி
சேர்த்து சலிக்கவும்.

100 கி வெண்ணெய் 
100 கி ஐசிங் சர்க்கரை (அல்லது சர்க்கரை பொடி செய்தது)
1/2 ஸ்பூன் சாக்கலேட் எசன்ஸ் 

அணைத்தும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.

ஓவனை கன்வென்ஸன் மோடில் ப்ரீ ஹீட் செய்யவும்.

முதலில் வெண்ணெயை அடிக்கவும், பின் அதனுடன் சர்க்கரை சேர்த்து அடித்து, எசன்ஸ் மற்றும் மாவு சலித்ததை சேர்த்து கலக்கி வைக்கவும்.




பின் பெரிய  உருண்டைகளாக செய்யவும்.
சாக்கலேட்டை சிறிய துண்டுகளாக வெட்டி அல்லது துருவி வைக்கவும்.


ஒரு உருண்டையை லேசாக தட்டி, சாக்கலேட்டை  தூவி, மேலே மற்றொரு உருண்டையை தட்டி, வெட்டி, பேக்கிங் தட்டில் வைக்கவும்.


பின் 180* செ   10 நிமிடம் பேக் செய்து , பின் அதனை ஆற விட்டு , ஒரு பாக்ஸில் போட்டு கெட்டியாக மூடி வைக்கவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...