எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

லெமன் சிக்கன் ( நாட்டு கோழி) / Lemon chicken fry



செய்முறை

250 கிராம் சுத்தம் செய்த நாட்டு கோழியில், சிறிது மஞ்சதூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகமிளகு தூள், உப்பு  சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் குக்கரில் 1 விசில் விட்டு வேகவைக்கவும். 
                            


பின் ஒரு கடாயில் 
                                      
1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து, வதக்கி, 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் 1/4 கப் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.


1/4 ஸ்பூன் சீரக, சோம்பு, கரம்மசாலா தூள்;
1/2 ஸ்பூன் மிளகாய், சிக்கன் மசாலா தூள்,
1 ஸ்பூன் மல்லி தூள், கொத்தமல்லி தழை
சேர்த்து வதக்கி, அதனுடன் வேகவைத்த சிக்கனை ( அதன் தண்ணீருடன்) சேர்த்து பிரட்டவும்.


1 ஸ்பூன் மிளகு தூள், 1/2 எலுமிச்சை பழ சாறு சேர்த்து, மிதமான தனலில் பிரட்டி, கொத்தமல்லி தூவி , சூடாக பறிமாறவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...