எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

புளியோதரை


செய்முறை

முதலில் 1 ஆழாக்கு அரிசியை சாதமாக்கி வைக்கவும்.
1 பெரிய எலுமிச்சை அளவு புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் 
காய்ந்த மிளகாய் - 3
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1/2 ஸ்பூன்
வறுத்து, பின் 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து பொடியாக்கவும்.




பின் ஒரு கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு,

கடுகு , உ.பருப்பு, க.பருப்பு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் , பெருங்காயம் தாளித்து
அதனுடன் நறுக்கிய 5 பல் பூண்டு, சிறிது வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.

பின் மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து மூடி கொதிக்க வைக்கவும்.

குறிப்பு: புளியை அளவாக தண்ணீர் விட்டு கரைக்கவும். புளியை நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம், சுவை மாறிவிடும்.




புளி பச்சை வாசனை போய் கெட்டிபட்டதும், அடுப்பை அணைத்து, சாதம், பொடியை சேர்த்து பிரட்டவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...