எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் (டைரிமில்க்) ஐஸ்க்ரீம் / chocolate icecream with chocolates


செய்முறை

குறிப்பு:  ஃப்ரீசரை நல்ல குளிர்ச்சியில் செட் செய்ய வேண்டும்.

முதலில்
 40 கிராம் சர்க்கரையுடன் 2 டீ.ஸ்பூன் சோளமாவை கலந்து வைக்கவும்.

 1 ஸ்பூன் ஜெலெடீனை சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.

25 கிராம் சாக்கலேட்டை மைக்ரோ வேவில்  20 நொடிகள் வைத்து, லேசாக உருக்கி வைத்து கொள்ளவும். 


பின்



ஒரு கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை காயவைத்து, அதில் சர்க்கரை கலவை, ஜெலெடின் சேர்த்து, மிதமான தனலில் பால் சிறிது கெட்டியாகும் வரை கிளறி, அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.




( 1 கப் ஃப்ரெஷ்க்ரீமை ஃப்ரிஜில் வைத்தெடுத்து, முட்டை அடிப்பதில் நன்கு அடிக்கவும்.  பின் அதை ஃப்ரீசரில் வைக்கவும்.)

க்ரீமை பால் கலவையுடன் மெதுவாக கலந்து, சாக்கலேட்டையும் கலந்து 



ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுத்து , 


மீண்டும் ஒரு முறை முட்டை அடிப்பதில் நன்கு அடித்து, 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து , பின் பறிமாறவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...