எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன் வறுவல்


செய்முறை

1/2 கிலோ மட்டனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு, 1 டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பிரட்டி, 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 பின் அதை குக்கரில் போட்டு, அதனுடன் 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், 1/4 கப் தக்காளி,2 ஸ்பூன் கறிமசாலா பொடி , 1 ஸ்பூன் தனியா பொடி சேர்த்து கலக்கி, 1/2 கப் தண்ணீர் விட்டு, 3 விசில் விடவும்.


பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து, 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,
அதனுடன் வேகவைத்த மட்டனை சேர்க்கவும்.
சிறிது உப்பு, கொத்தமல்லி சேர்த்து, மட்டன் சுருண்டு வரும் வரை விட்டு ,அடுப்பை அணைக்கவும்.
இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சுவையாக இருக்கும்.
ப்ரெட் டோஸ்டின் நடுவே வைத்து சான்விச்சாக பறிமாறலாம்.

                            
இதே மட்டனை முற்றிலும் நீர் சுண்ட வறுத்து, மிளகு தூள் சேர்த்து பிரட்டினால் , சுவையான மிளகு மட்டன் சுக்கா வறுவல் தயார்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...