எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கம்பு அல்வா


செய்முறை

கம்பு மாவு - 1 கப்
(மாவு செய்யும் கம்பை வாங்கி, அரைத்து வைத்து கொள்ளவும்.)

துருவிய வெல்லம் - 3/4 கப் 
( நான் இங்கு சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து செய்தேன்) 

முந்திரி, ஏலக்காய் -3
நெய் - 2 மேஜைக்கரண்டி


ஒரு கடாயில் நெய்யை விட்டு, அதில் கம்பு மாவு, முந்திரி சேர்த்து மிதமான தனலில் வறுக்கவும்.
பாதி வறுபடும் பொழுது,


 இன்னொரு அடுப்பில் வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரைந்து , 1 கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
பாகு வர தேவையில்லை.


பின் மாவு வறுபட்டதும், அதாவது முந்திரி பொன்னிறமாக மாறும் பொழுது, மாவு தயார் என்று அர்த்தம்,
அப்பொழுது வெல்லத் தண்ணீரை ஊற்றி கொண்டே மாவைக் கிளறவும்.
ஒரு நிமிடத்தில் அல்வா திரண்டு வந்து விடும்.

கம்பு அல்வா தயார்





உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...