எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன் கபாப்


செய்முறை

மட்டன் துண்டுகள் (அ) கொத்துகறி , சிறிது கொழுப்புடன் - 250 கிராம்
தண்ணீரை நன்கு பிளிந்து, மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்


 


பின் இஞ்சிபூண்டு - 3 பல், 1 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை, 2 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1 துளி சீரக தூள், உப்பு, கரம்மசாலா தூள் - 1/2 ஸ்பூன், சிறிது மல்லி தூள், மஞ்சள் தூள்
சேர்த்து அரைத்து மட்டனுடன் கலந்து கொத்தமல்லி சேர்த்து , 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பப்பாளி காய் கிடைத்தால், அதன் விழுது 1 ஸ்பூன் சேர்க்கலாம்.
மட்டன் மிருதுவாக வரும்.


பின் குச்சியில் சன்னமாக மட்டனை உருட்டி, ஒவனில் க்ரில் செய்யலாம்.

ஓவன் இல்லாதவர்கள் தோசைக்கல்லிலேயே செய்யலாம்.
தோசைக்கல்லை சூடு செய்து, சிறிது எண்ணெய் தேய்த்து, அதன் மேல் மட்டனை வைத்து, மிக குறைந்த தீயில் 2 நிமிடத்திற்கு ஒரு முறை உருட்டி உருட்டி, நன்கு வேகவைக்கவும்.




சூடாக கபாப் சாஸுடன் பறிமாறவும்.
சாஸ் செய்ய :
புதினா இலை -1 கப்
கெட்டி தயிர் - 1/2 கப்
பூண்டு - 1 பல்
பச்சை மிளகாய் - 1
ஜீரகம் அ  சீரக தூள்- சிறிது
உப்பு


நன்கு மிருதுவாக அரைத்து, கபாப்புடன் பறிமாறவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...