எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் ஜாமூன்




செய்முறை

200 கிராம் ரெடிமிக்ஸ் குலாப் ஜாமூன் மாவுடன், 2 மேஜைக்கரண்டி கோகோ பொடி சேர்த்து கலக்கி, நீர் சேர்த்து மிருவாக பிசைந்து, 5 நிமிடம் மூடிவைக்கவும்.




பின் தேவையான வடிவம் செய்து, மிதமான காய்ச்சலில் உள்ள எண்ணெயில் (திருப்பி திருப்பி விட்டு ) பொறித்தெடுக்கவும்


பின் 200 கிராம் மாவிற்கு, 
600 மில்லி (கப்பில் )சர்க்கரையும், 600 மில்லி தண்ணீரும் சேர்த்து
சர்க்கரை கரைந்து நன்கு கொதித்து பிசுக்கு பதம் வந்ததும், அடுப்பை அணைத்து ஏலக்காய் தூள் சேர்க்கவும்.


 உடனே பொறித்த ஜாமூன் களை பாகில் ஊறவைத்து பறிமாறவும்.
சில்லென்ன ஐஸ்க்ரீமுடன் பறிமாற சுவையாக இருக்கும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...