எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

காளான் சிக்கன் பீஸா



செய்முறை

மைதா மாவு - 1 கப்
பேக்கிங்க் பொடி- 1/4 ஸ்பூன்
ஆலிவ் ஆயில் (அ) ஆயில் - 2 டே.ஸ்பூன்
உப்பு

இவை அணைத்தையும் கலந்து, பின்
வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி , பிசைந்து , 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
பின் ஓவனை பேக்கிங்க் மோடில் ப்ரீ-ஹீட் செய்து,

பேக்கிங்க் தட்டில் எண்ணெய் தடவி , மெத்தென தேய்த்த மாவை 
வைத்து, 
அங்கங்கே குத்தி விடவும்
மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவவும்.

ஓவனில் 200*செ சூட்டில், 5 நிமிடம் வேகவைக்கவும்
மாவு பொந்திவரும், நிறம் லேசாக மாறும் சமயத்தில்
எடுத்து




சாஸ் தடவி, துருவிய மோசரலா சீஸ் , பின் சிக்கன், குடைமிளகாய், மீண்டும் சீஸ் , காளான், குடைமிளகாய், மீண்டும் சீஸ் 
என தூவி,
மறுபடியும் ஓவனில் 5 முதல் 10 நிமிடம் (சீஸ் உருகும் வரை)
வைத்து , எடுத்து, 
ஆரிகானோ, சில்லி ஃப்லேக்ஸ் தூவி,
கட் செய்து பறிமாறவும்

குழந்தைகள் விரும்பி உண்பர்

குறிப்பு: 
1.காய்களை ஒரே மாதிரி சன்னமாக வெட்டவும்
2. காய்களில் லேசாக எண்ணெய் பிசறி போடவும்












No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...