செய்முறை
தேவையான காய்களை நறுக்கி வைக்கவும்.
1 கப் பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்
ஒரு கடாயில் 1 குழிகரண்டி எண்ணெய் ஊற்றி, 2 பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு மற்றும் தேவையான மசாலா வை தாளித்து,
1 வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
பின் 2 பச்சைமிளக்காய், 1 மேஜைக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, காய்களை சேர்த்து,
1 ஸ்பூன் மிளகாய் தூள்
1/2 ஸ்பூன் மல்லி தூள்
1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள்
சேர்த்து வதக்கி, 1 கரண்டி லேசாக புளித்த தயிர், உப்பு
சேர்த்து காயை 90% வேகவைக்கவும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
காய் வேகும் சமயத்தில், அரிசியை எண்ணெய்,உப்பு,சீரகம் சேர்த்து, முக்கால் வேக்காடு வேக செய்து , வடித்து வைக்கவும்
பின் ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்து, முதலில் சிறிது காய் கலவையை பரப்பவும், அதன் மேல் சாதத்தை பரப்பி, சிறிது கலர் மற்றும் கரம்மசாலா பொடி தூவவும்
மீண்டும் அதன் மேல் காய் கலவை, பின் சாதம், கலர், கரம்மசாலா பொடி போட்டு, அதன் மேல் நெய் ஊற்றி, கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.
புதினா கூட தூவலாம்.
நேராக அடுப்பின் மேல் பாத்திரத்தை வைக்காமல்,
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, அதன் மேல் வைக்கவும்.
குறைந்த தனலில் 20 நிமிடம் வைக்கவும் , அதாவது காயின் நீர் சுண்டி, சாதம் முழுமையாக வெந்துவிடும்
பின் சமமாக பிரட்டி, சூடாக ,
தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment