தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 4 கப்
உளுந்து - 3/4 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு- 3 ஸ்பூன்
பஞ்சு போல் இட்லி செய்ய சில டிப்ஸ்
டிப்ஸ்:
1. அரிசியை களைந்து , எந்த தண்ணீர் ஊற்றி அரைக்க போகிறோமோ, அதில் ஊறவைக்கவும்.
2. உளுந்தையும் வெந்தயத்தையும் கழுவி, நல்ல தண்ணீர் 2 கப் ஊற்றி, 10 நிமிடம் ஊறியதும், அதை ஃப்ரிஜில் வைக்கவும்
கூடவே 1 பாட்டில் தண்ணீரையும் ஃப்ரிஜில் வைக்கவும்
அரிசி ஊறுவதற்குள் , இவை குளிர்ந்து விடும்
3. உளுந்தை குளிரவைத்து ஆட்டுவதால் நன்கு பொதுபொதுவென மாவு பொங்கி ஆட்டுபடும்.
4. உளுந்து நல்ல தரமான புது உளுந்தாக இருந்தால்,
Grinder ல் ஆட்ட 1:7 அதாவது 1 பங்கு உளுந்துக்கு 7 பங்கு அரிசி வைத்து செய்யலாம்
அருமையாக வரும் ( டிப்ஸ் 3ஐ பார்க்கவும்)
Mixie யில் அரைத்தால் 3/4 : 4 முறையில் செய்யலாம்
5. முதலில் உளுந்தை ஆட்டி விட்டு, பின் அரிசியை ஆட்ட வேண்டும்
6. மிக்சியில் அரைக்கும் பொழுது ஜார், மாவு மற்றும் மோட்டார் விரைவில் சூடாகும்,
ஆனால் மாவை அரைக்க, குளிர வைத்த நீரை ஊற்றுவதால், சூடு ஆகாமல்
இருக்கும்
7. வெளி நாடுகளிகளில் அல்லது குளிர் சமயத்தில் , அரைத்த மாவு பொங்கி வராது,
அந்த சமயத்தில் ஓவனில் லைட் மட்டும் போட்டு , மாவை வைத்து விட்டால் , 6 முதல் 8 மணி நேரத்தில் பொங்கி விடும்
ஓவன் இல்லாத்தவர்கள், 1 கரண்டி பழைய இட்லி மாவை , அரைத்த மாவுடன் சேர்த்து கலந்து வைத்தால், 6 முதல் 8 மணி நேரத்தில் பொங்கி விடும்
குளிர்ந்த இடத்தில் பழைய மாவு கூட பொங்குமே தவிர புளித்த வாசம் வராது.
பழைய மாவும் இல்லாதவர்கள் 1 பச்சைமிளகாயை போட்டு வைக்கலாம்
8. அரிசியும் உளுந்து மாவும் உப்பு சேர்த்து கையில் கலக்கி வைக்கவும்
கை சூட்டிற்கு புளித்து பொங்கும்
9. மாவை மிக கெட்டியாகவோ தண்ணியாகவோ அரைக்க கூடாது
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் பழைய இட்லிமாவை உப்பு சேர்த்து வைக்கவும்
முதலில் உளுந்தை மிக்சியில் பொதுபொது என ஆகும் வரை அரைத்து, அதே பாத்திரத்தில் ஊற்றவும்
பின் அரிசியை குளிர்ந்த நீர் ஊற்றி அரைத்து ,அதனோடு சேர்க்கவும்.
கையில் நன்றாக கலந்து, மூடி வைக்கவும்
மாவு பொங்கியதும், மெதுவாக கலந்து வேறு பாத்திரத்தில் ஊற்றி மூடிவைக்கவும்.
டிப்ஸ்:
10. இரண்டு பாத்திரத்தில் ஊற்றினால் ஒன்றை இட்லிக்கும், மற்றொன்றை சிறிது நீர் சேர்த்து கலக்கி தோசைக்கும் வைத்து கொள்ளலாம்
இட்லிக்கு வைத்த மாவில் பணியாரம் செய்யலாம்
11. இட்லி ஊற்றும் முன் மாவு ஃப்ரிஜில்ரிருந்து வெளியில் வைத்து, மாவு நிலை மாறியதும் செய்தால், இட்லி கல் போல் வராது.
குளிர்ந்த மாவு வேக தாமதமாகி கெட்டியாக கூடும்
12. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் ,
மாவு தட்டை வைத்து மூடவும்
நீர் கொதி நிலையில் இருப்பதால் , சீக்கிரமாகவும் வேகும்,மிருதுவாகவும் இருக்கும்
கையில் நீர் தொட்டு இட்லியை ஓட்டை போட்டல் ஒட்டாமல் வரும்
பிறகு நீர் தெளித்து தட்டில் மாற்றி (துணியில் ஒட்டாமல் விழும் ) ,
ஹாட்கேஸில் போட்டு , சூடாக பறிமாறவும்
No comments:
Post a Comment