செய்முறை
முதலில் 1 கப் கோதுமை மாவுடன் 1/4 கப் வெண்ணெய்,
உப்பு சேர்த்து நன்றாக பிசறி,
பின் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி , பூரி மாவு போல் பிசைந்து மூடி
வைக்கவும்.
With crumbled mixture of
( a cup of whole wheat flour, salt and 1/4 cup of butter )
add warm water.
Make a soft dough
close and keep it side.
Can add some APF if preferred
Then
3 உருளைக்கிழங்கை 4 ங்காக வெட்டி,
குக்கரில் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு
வேகவைத்து, தோல் உரித்து, பொடிக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து,
பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம்
பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
பின் மஞ்சதூள், மிளகாய்தூள்( 1 ஸ்பூன்)
கரம்மசாலாதூள்(1/2 ஸ்பூன்)
சேர்த்து வதக்கி,
அதனுடன் பொடியாக நறுக்கிய 1 கப்
( பாலக்கீரை + வெந்தய கீரை)
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
சேர்த்து நன்றாக வதக்கி,
உப்பு மற்றும்,
மசித்த கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து விட்டு
அடுப்பை அணைத்து , ஆறவிடவும்.
குறிப்பு:
இதை சப்பாத்தியுடன் பறிமாறலாம்
மசால் தோசை போல் தரலாம்
சப்பாத்தி ரோல்ஸ் செய்யலாம்
இதை சிறு உருண்டைகளாக உருட்டி, உருளைகிழந்து போண்டா போல்
செய்யலாம்.
ப்ரெடில் தடவி உண்ணலாம்.................
Cut 3 potatoes to 4 and cook in cooker
Leave 2 whistles, strain water , peel skin and mash.
Then Heat a kadaai, add some oil and season cumin seeds
Add finely chopped 1 cup of Onion and green chillies.
saute well
Add turmeric powder, 1 spoon of chilly powder,
1/2 spoon of garammasala powder
mix well
Add finely chopped
1 cup of ( Palak leaves + Methi leaves)
coriander and curry leaves
saute till done.
Finally add mashed potato and salt
Mix well together.
Off stove and Allow it to cool.
Note:
It can be served with chapathi, Bread spread
like Aloo Bonda and more.......
Then
ஓவனை 180*செ சூடு செய்யவும்
மாவை பூரிக்கு போல் சிறு சிறு உருண்டைகளாக்கி,
சிறிது கெட்டியாக தேய்த்து,
நடுவில் காய் கலவையை வைக்கவும்.
ஓரங்களில் தண்ணீர் தடவி விடவும்.
பின் படத்தில் உள்ளது போல், முதலில் இரு புறமும் மடித்து
ஒட்டி, பின் கீழிருந்து மடித்து ஒட்டவும்.
மாவின் எல்லா புறமும் எண்ணெய் தடவி விடவும்
பேக்கிங் தட்டில் வைத்து, 15 முதல் 20 நிமிடம் வேகவிட்டு
நிறம் மாறும் சமயத்தில், எடுத்து
சாஸ் உடன் சூடாக பறிமாறவும்.
Pre heat the Oven at 180*c
Make small balls from dough, Roll it to light thickness.
Keep the stuff in center,
Grease water at the edges and cover as mentioned in picture
First from sides and then from down, seal well.
Apply some oil on samosas,
Bake it in oven for 15 to 20 mts till done .
Serve hot with sauce.
No comments:
Post a Comment