எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Cauliflower rice / காலிஃப்லவர் சாதம்



காலிஃப்லவர் சாதம்

அரிசி ( பொன்னி / பாஸ்மதி )- 1 கப் ( Rice )

எண்ணெய் - 3 மேஜைகரண்டி (Oil - 3tbsp )
நெய் - 1 ஸ்பூன் ( Ghee - 1 tsp )

பட்டை , கிராம்பு - தாளிக்க ( Cinnamon , cloves )
சின்னவெங்காயம் - 1/2 கப் நறுக்கியது ( Onions chopped)
பச்சைமிளகாய் - 3 ( Green chillies - 3 )

தக்காளி - 2 (Tomatoes - 2)
காலிஃப்லவர் - 1 சிறியது ( சுத்தம் செய்யவும் ) 
( Cauliflower - 1 Clean and chopped)

இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி ( Gingergarlic paste - 1 tsp )
மஞ்சதூள்- 1/4 தேக்கரண்டி ( Turmeric powder - 1/4 tsp )
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி ( Chilly powder - 1/2 tsp )
கரம்மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி ( Garammasala powder - 1/2 tsp )
உப்பு - தேவையான அளவு ( salt )

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது (Curryleaves and coriander leaves )



செய்முறை

அரிசியை ,  உதிரியாக சாதம் செய்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு, பட்டைகிராம்பு
தாளிக்கவும்.
பின் வெங்காயம் , பச்சைமிளகாய் கறிவேப்பிலை,
சேர்த்து லேசாக வதக்கி,
இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


பின் தூள்களை சேர்த்து கலக்கி, உடனே தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் காலிஃப்லவரை மற்றும் உப்பு சேர்த்து கலக்கி
மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து , காய் வேகும் வரை விடவும்.
(தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வேகவைக்கவும்.
காய் மசியும் அளவு வேகவைக்க கூடாது)

காய் வெந்ததும், சாதத்தை சேர்த்து கலக்கி,
கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
டிபன் பாக்ஸிற்கு, இதனுடன் சிப்ஸ் மற்றும் தயிர் பச்சடி வைத்து தரலாம்.


Cauliflower Rice

Cook a cup of rice and keep aside.

Heat oil and ghee in a kadai.
Season with cinnamon and cloves.
Add chopped onions , green chillies and curryleaves, saute lightly.
Add gingergarlic paste , saute well.
Add all the spice powders mentioned, mix 
and immediately add tomatoes.
Saute lightly and add cauliflower, salt
Mix and cover it.
Allow it to cook in medium flame.
If need , sprinkle water to cook.
Don't over cook the vegetables.

Once done , add cooked rice and coriander leaves, mix evenly 
and serve hot with chips / Raita.
Easy to cook and pack lunchbox recipe.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...