எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Coconut Poli / தேங்காய் போளி

Stuffed sweet coconut Poli


தேவையான பொருட்கள்

மேல்மாவு செய்ய: For dough

மைதாமாவு - 2 கப் / Maida/APF - 2 cups
சர்க்கரை - 1 மேஜைகரண்டி / Sugar -1 tbsp
தேங்காய் தண்ணீர் - 1 தேங்காயிலிருந்து / coconut water from 1 coconut
உப்பு - 1/4 தேக்கரண்டி / salt -1/4 tsp
தண்ணீர் - தேவையான அளவு / water as required
எண்ணெய் - சிறிதளவு / Oil 


பூரணம் செய்ய : For pooranam 

தேங்காய் - 1 ( துருவிக்கொள்ளவும் ) / 1 Coconut scrapped 
கருப்பு எள் -1/4 கப் / Sesame - 1/4 cup
பொட்டுகடலை - 1/4 கப் / Roasted gram - 1/4 cup
வெல்லம் - 1/2 கப் (துருவியது) / Grated Jaggery - 1/2 cup 
சர்க்கரை- தேவைப்பட்டால் / sugar option
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி / Cardamom powder- 1/4 tsp

எண்ணெய் - பொறிக்க , oil for cooking


செய்முறை:


மைதாமாவுடன் சர்க்கரை மற்றும் உப்பு கலந்து, 
பின் தேங்காய் தண்ணீர் ஊற்றி பிசையவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
மேலே எண்ணெய் பூசி, மூடி வைக்கவும்.


To APF add sugar and salt, mix well.
Then add coconut water, mix well .
If need add required water and make a soft dough.
Add some oil, marinate and cover it for sometime.


பூரணத்திற்கு, எள்ளை பொறியும்வரை வறுத்து எடுக்கவும்.
தேங்காயை நீர் சத்து போகும் வரை வறுத்து எடுக்கவும்.
ஆறியதும்,
மிக்சியில் பொட்டுகடலையை பொடிக்கவும், 
பின் அதனுடன் ஏலக்காய் தூள், வறுத்த எள், தேங்காய், வெல்லம், 
சர்க்கரை சேர்த்து , லேசாக அரைக்கவும்.
இனிப்பை ருசி பார்த்து, தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.


Dry roast Sesame till it splutters, keep aside.
Dry roast coconut till its watery consistency goes off.
Allow it to cool.
In a mixie jar, powder roasted gram , then add cardamom powder, 
coconut, sesame, Jaggery , sugar and blend together well.


பின்
பூரணத்தை உருட்டி வைக்கவும்.

மாவை உருட்டி வைக்கவும்.

மாவை எண்ணெய் தடவி, லேசாக தட்டி, 
நடுவில் பூரணம் வைத்து மூடி வைக்கவும்.


Make the balls of pooranam and dough seperatetly.
keep the pooranam in centre and cover well, keep covered.
Heat tawa, press the balls with hand or poori maker machine , 
cook well on tawa like chapathi till both sides are done.
Can serve hot.
Once cooled , Can store it for a week in an air tight container.


பின் ஒவ்வொன்றாக தட்டி அல்லது பூரி அமுக்கும் மெசினில் அமுக்கி, தோசைக்கல்லில் சப்பாத்தி போல் , எண்ணெய் விட்டு சுடவும். 
சூடான தேங்காய் போளி தயார்.
ஆறவிட்டு, ஒரு பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...