செய்முறை
ராகி சேமியா - 1 பாக்கட்
சேமியாவை தண்ணீரில் 3 நிமிடம் ஊறவைக்கவும்.பின் தண்ணீரை வடிகட்டி, இட்லி பானையில் , ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுத்து, ஒரு தட்டில் கொட்டவும்.
சிறிது ஆறவிடவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு தாளித்து,
கறிவேப்பிலை, நறுக்கிய 1 கப் சின்ன + பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாய், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சேமியா, தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி தூவி மிதமான தனலில் அடுப்பை வைத்து, கிளறவும்.
சூடாக, தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
Yummy...
ReplyDelete