எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Bittergourd Curry / பாவற்காய் குழம்பு



தேவையான பொருட்கள்

பாவற்காய் - பெரியது - 1 / Bittergourd
புளி - எலுமிச்சை அளவு / lemonsized tamarind
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் / Turmericpowder
வெங்காயம் - 1 கப் / Onions - 1cup
தேங்காய் துருவல் - 1/4 கப் / shredded coconut- 1/4 cup
சாம்பார்தூள் - 3 ஸ்பூன் / Sambarpowder - 3 tsps
கறிவேப்பிலை / curryleaves
உப்பு / salt
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க
நல்லெண்ணெய்
கொத்தமல்லி



செய்முறை

கடாயில் புளியை கரைத்து , வடித்து ஊற்றி
அதில் வெட்டிய பாவற்காய், மஞ்சள்தூள்
சிறிதளவு உப்பு சேர்த்து ,
மிதமான தனலில் காயை வேகவைக்கவும்.
( புளியில் வேகவைப்பதால் காய் கசப்பு இல்லாமல் இருக்கும்)

மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, 
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், அடுப்பை அணைத்து,
சாம்பார் தூள் மற்றும் தேங்காய் சேர்த்து பிரட்டி,
ஆறியதும் , விழுதாக அரைக்கவும்.






Cook the sliced bittergourd with tamarind water, turmeric powder and little salt.

On the otherside, saute the chopped onions and curryleaves with some oil.
Once onions are 3/4th sauted, off the stove.
Add sambarpowder, coconut, mix well.
Allow it to cool and make a paste.


பின் 
அரைத்த விழுதை , வெந்த காயுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து , 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
கடைசியாக தாளித்து சேர்க்கவும்.
சுவையான கசப்பில்லாத பாகற்காய் குழம்பு தயார்.


Add the grounded paste to the cooked bittergourd, add required water and salt.
Allow it to boil 5 minutes .
Season and add the ingredients mentioned.
Once it reaches its required consistency, switch off the stove.
Serve with rice, Idli, Dosa....



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...