எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சேனைக்கிழங்கு வறுவல்


சேனைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு – ¼ கிலோ (பெரிதாக வெட்டி வைக்கவும்)
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு

மசாலா அரைக்க:
பெரிய வெங்காயம் –1

தக்காளி – 1

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம்மசாலா தூள் – ½  டீஸ்பூன்

மல்லி (தனியா) தூள் – 2 டீஸ்பூன்

பூண்டு – 5 பல்

இஞ்சி – 1 துண்டு



குறிப்பு: 

மசாலாவிற்கு சின்ன வெங்காயம்(10), காய்ந்த மிளகாய் (4), பட்டை கிராம், சோம்பு, (தலா – 2), மல்லி விதை (1 டே.ஸ்பூன்), உடன் பூண்டு இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து அரைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.



செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கை மஞ்சள் தூள் , உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.



பின் ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, அரைத்த மசாலாவை சேர்த்து,


நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


நன்றாக வதங்கியதும் ,


சிறிது தண்ணீர்(காய் வேகவைத்ததை பயன் படுத்தலாம்) சேர்த்து கொதிக்க வைக்கவும்.






பின் காயை சேர்த்து,

 

மசாலா காயில் திரண்டு வரும் வரை பிரட்டி விடவும்.






பின் கொத்தமல்லி தூவி, பறிமாறவும்.




இதை சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி உடன்
பறிமாறலாம்.


வேறுமுறை

காயை எண்ணையில் பொரித்தெடுத்து, இதே முறையில் செய்யலாம்  அல்லது காயை எண்ணையில் பொரித்தெடுத்து, (பூண்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், சோம்பு) மசாலாவுடன் மேற்கூரிய முறையில் செய்யலாம்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...