எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன்

மட்டன் வகைகள்:






முதலில் 4 நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு -6 பல் , இவற்றை எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.
(அல்லது சின்ன வெங்காயம் – 2 கப் உபயோகிக்கவும். குழம்பு மிக ருசியாக இருக்கும்.)


பின் அடுப்பை அணைத்து,  கறிமசாலா பொடி 3 டே.ஸ்பூன் சேர்க்கவும். (பொடி லிங்க்கை பார்க்கவும்) ,http://neelavinsamayalarai.blogspot.in/2012/08/blog-post_2421.html




மஞ்சள்தூள் சேர்க்கவும்.

ஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதில் 2 டே.ஸ்பூன் மசாலாவை தனியாக எடுத்து வைக்கவும்.



பின் சுத்தம் செய்த ½ கிலோ மட்டனை , குக்கரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் (மட்டனில் உள்ள நீர் வரும்) ஒரு கொதி வரும் வரை விடவும்.






அதன் பின் அரைத்த மசாலா, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 3 விசில் விடவும். ( மட்டன் வேகும்வரை )





இது தான் பேசிக் .
இதை வைத்து 3 வகை (அதாவது நம் விருப்பபோல் செய்யலாம்)


1.       குழம்பு :

ஒரே குழம்பாக வேண்டும் என்றால், மேல் கூறியவாறு வேகவைத்த மட்டனை,

கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தாளித்து, ½ கப் சின்ன வெங்காயம், சேர்த்து வதக்கி,







குழம்பில் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.





தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.




அடுப்பை சிம்மில் வைத்து ½ கப் தேங்காய்பால் சேர்த்து, 2 நிமிடம் கழித்து
அடுப்பை அணைக்கவும்.








கொத்தமல்லி தழை தூவவும்.







2.       குழம்பு + வறுவல்:



மேல் கூறியவாறு வேகவைத்த மட்டனை, எலும்பு இல்லா துண்டுகளை, தணியாக எடுத்து வைக்கவும்.






தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து ½ கப் தேங்காய்பால் சேர்த்து, 2 நிமிடம் கழித்து
அடுப்பை அணைக்கவும்.






கொத்தமல்லி தழை தூவவும்.








வறுவல் செய்ய:



நாம் மேலே அரைத்த மசாலாவில் , 2 ஸ்பூன் வைத்துள்ளதை எடுத்து கொள்ளவும். அதனுடன் ½ டீ.ஸ்பூன் கரம்மசாலா தூள் எடுத்து கொள்ளுங்கள்.







வடித்த மட்டன் துண்டுகள்.




அதனுடன் 2 ஸ்பூன் தேங்காய்பூ, கொத்தமல்லி தழை சேர்த்து வைக்கவும்.








பின் ஒரு கடாயில், எண்ணை ஊற்றி, கடுகு தாளித்து,  அதனுடன் நறுக்கிய ½ கப் சின்ன வெங்காயம் , ½ கப் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
விருப்பப்பட்டால் ½ டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.




பின் நறுக்கிய தக்காளி (1) சேர்த்து வதக்கவும்.












பின் மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.









பின் மட்டனை சேர்க்கவும்.



தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.





விருப்பப்பட்டால் சிறிது வெண்ணை சேர்த்து, மிதமான தனலில் திரண்டு வரும் வரை விட்டு இறக்கவும்.



இது சாதம், தோசை, சப்பாத்தி உடன் பறிமாறலாம்.



3.       ஒரே வறுவலாக மட்டும் வேண்டும் என்றால்:

½ கிலோ மட்டனை , ½ கப் அரைத்த விழுது ,உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அல்லது சிறிது தண்ணீர் சேர்த்து, 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
பின் தண்ணீர் இருந்தால், லேசாக சுண்டும் வரை சூடு செய்யவும்.

பின் ஒரு கடாயில், எண்ணை ஊற்றி, கடுகு தாளித்து,  அதனுடன் நறுக்கிய ½ கப் சின்ன வெங்காயம் , ½ கப் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
விருப்பப்பட்டால் ½ டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.

பின் நறுக்கிய தக்காளி (1) சேர்த்து வதக்கவும்.
 விருப்பப்பட்டால் தேங்காய் பூ சேர்க்கலாம்.

பின் மசாலாவுடன்  வேகவைத்த மட்டனை சேர்த்து , மிதமான தனலில் திரண்டு வரும் வரை விட்டு இறக்கவும்.

















No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...